Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

“KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( ‘KD: The Devil’s Warfield’ ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!

Posted on May 27, 2024
“KVN Production's கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் (  'KD: The Devil's Warfield' )  திரைப்படம்,  டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!
“KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் ( ‘KD: The Devil’s Warfield’ ) திரைப்படம், டிசம்பர் 2024 இல் வெளியாகிறது !!


இப்படத்தின் ஆடியோ உரிமை ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது

KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, “கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

“கேடி – தி டெவில்” 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலந்த கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

KVN Productions வழங்கும் “கேடி – தி டெவில்” படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme