Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ‘பகலறியான்’ – திரை விமர்சனம்

‘பகலறியான்’ – திரை விமர்சனம்

admin May 25, 2024
'பகலறியான்' - திரை விமர்சனம்-indiastarsnow.com

'பகலறியான்' - திரை விமர்சனம்-indiastarsnow.com

கதாநாயகன் வெற்றி சென்னையில் உள்ள கார் கேரேஜில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியின் நண்பன் அந்த கேரேஜை நடத்தி வருகிறார். அந்த கேரேஜில் பல போதை பொருள் கைமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வெற்றி கதாநாயகியான அக்‌ஷராவை காதலிக்கிறார். இரவு அக்‌ஷராவுடன் ஊரை விட்டு செல்வதாக திட்டம் தீட்டுகின்றனர்.போதைப் பொருள் பறிமாற்றத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. காரணம் இல்லாமல் ஒரு கும்பல் வெற்றியை துரத்திக் கொண்டு இருக்கிறது. இந்த இரவு போராட்டத்தில் இருந்துவெற்றி எப்படி தப்பித்தார், வெற்றியை ஏன் அந்த கும்பல் துரத்துகிறது, அக்‌ஷயாவை கரம் பிடித்தாரா? என்பது படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்து இருக்கும் வெற்றி இப்படத்தில் குறைந்த வசனத்தை பேசி கண்களின் மூலமே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியான அக்‌ஷரா கொடுத்த வேலையைசிறப்பாக செய்துள்ளார். சைலண்டாக நடித்த முருகன் கொடுத்த வேலையை செய்துள்ளார்.

இயக்குனர் முருகன் ஒரு குறிப்பிட்ட இரவில் இரண்டு நபர்களை சுற்றி நடக்கும் ஒரு ஹைப்பர்லிங்க் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார். இரண்டு கதாபாத்திரங்களும்ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரே மாதிரியான கதை பின்னணி இருக்கிறது. ஹைப்பர் லிங்க் கதைக்களத்தை எடுத்து இருந்தாலும், படத்தின்
திரைக்கதையில் குழப்பி தள்ளியுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் வரும்வரை படத்தின் கதையை நாம் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகள் துண்டு துண்டாக வெட்டப் பட்டதுப் போல். அங்கும் இங்கும் விலகி நிற்கிறது. இந்த கதையை இன்னும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் இயக்கி இருந்தால் படம் மக்களால் ரசிக்க பட்டிருக்கக்கூடும்.

படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் விவேக் சரோ.

படம் முழுவதும் இரவில் நடப்பதால் அதை திறமையாக கையாண்டுள்ளார் அபிலாஷ்

லதா முருகன் பகலறியான் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

Post navigation

Previous MDRF Partners with embedUR to co-create advanced AI models for Diabetic Research
Next ’சாமானியன்’ திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.