Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
'Thalamai Seyalagam' Review-indiastarsnow.com

“தலைமை செயலகம் விமர்சனம்” ZEE 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில்

Posted on May 17, 2024
'Thalamai Seyalagam' Review-indiastarsnow.com
‘Thalamai Seyalagam’ Review-indiastarsnow.com

கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, Y.G. மகேந்திரன், விபின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தத் தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். Z 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

தலைமை செயலகம் எட்டு எபிசோடுகளைக்கொண்ட தொடர் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பரபரப்பான அரசியல் திரில்லர்
தொடராக திரையில் ரசிக்க வைத்துள்ளது , தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் பத்திரிகையாளர் அட்வைஸர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒரு பக்கம் தன் தந்தையை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் ரம்யா. சிபிஐ அதிகாரிகள் துர்கா என்ற கொலை குற்றவாளி பெண்ணைத் தேடி ஜார்கண்ட், டெல்லி செல்கிறார்கள். இதே வழக்கை பரத் அவர்களும் தமிழ்நாட்டில் விசாரணை செய்கிறார். இரண்டு தளங்களில் பயணம் செய்யும் கதை ஒரு கட்டத்தில் இணைந்து பயணம் செய்கிறது இந்த தொடரில் முதலமைச்சர் கிஷோர் ஊழல் வழக்கில் இருந்து தப்பித்தாரா ? போலீஸ் அதிகாரியான பரத் தேடி சென்ற பெண் குற்றவாளி? திரைக்கதை இறுதியில் முதல்வர் பதவி யாருக்கு சொந்தம் ? போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த தலைமை செயலகம் .

வில்லன் கதாபாத்தில் கலக்கும் நடிக்கும் கிஷோர் மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு குடும்ப தலைவனாகவும் மிக சிறப்பாக நடித்து தானும் சிறந்த கதை நாயகன் என்று நிரூபித்து உள்ளார் கிஷோர்.

கொற்றவை கேரக்டருக்கு ஸ்ரேயா ரெட்டி சிறப்பாக நடிப்பை கொடுத்து சிறந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார் மற்றும் சந்தானபாரதி இந்தத் தொடரில் தன் முழு நடிப்புத் திறமையையும் காட்டி அசத்தியுள்ளார் . ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், Y G மகேந்திரன் என நடித்தவர்கள் அனைவருமே கதைக்கு நடிப்பின் மூலம் பலம் சேர்த்துள்ளார் .

ஜிப்ரான் இசை மூலம் திரைகதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
வொய்ட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு , ரவிக்குமாரின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்

  • ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !
  • தெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!
  • “‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal
  • எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!
  • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme