Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
"உயிர் தமிழுக்கு" திரை விமர்சனம்

“உயிர் தமிழுக்கு” திரை விமர்சனம்

Posted on May 10, 2024

கதையின் நாயகி பெயர் தமிழ் எனவேய நாயகன் அந்த தமிழுக்கு தன் உயிரையும் கொடுப்பான் இந்த கேபிள் டிவி பாண்டி(அமீர்).

கேபிள் டிவி தொழில் செய்து வரும் பாண்டியனுக்கு, அரசியல் வாரிசான தமிழ் செல்வி மீது காதல். அவரை பார்ப்பதற்காகவே தேர்தலில் நிற்கிறார். அவருடன் காதல் வயம் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மக்கள் செல்வாக்கையும் பெறுகிறார். தமிழ் செல்வியும் ஒரு கட்டத்தில் இவரை காதலிக்க, இது அவருடைய அப்பாவிற்கு பிடிக்காமல் பாேகிறது. அவரை யாரோ கொலை செய்ய, அந்த கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது. இதனால் தமிழ் செல்வியும் அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தன் காதலிக்கு தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காகவும் தனது காதலை நிரூபிப்தற்காகவும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். அந்த கொலையை செய்தது யார்? பாண்டியன் தேர்தலில் வெற்றி பெற்றாரா? இதற்கு பதிலாக வருகிறது படத்தின் கதை.

மக்கள் முன்னணி கழகம் சார்பாக அமீர் அந்த தேர்தலில் வென்று சாந்தினியை காதலும் செய்கிறார். பின் சில வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். நடிகர்கள் அமீர் வழக்கம்போல் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

காட்சிகளிலும் வசனங்களிலும் சமகால அரசியலைக் கலந்து கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. அதுவும் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இருப்பதும், ஆனால் அவற்றை நாம் சரியாக கணித்து சிரிக்க முடிவதும் நல்ல காமெடி கெமிஸ்ட்ரி.

இசை வித்யாசாகரின் இசை காட்சிற்கேற்ப அமைந்துள்ளது. பின்னணி இசை கேட்கும் ரகம் தயாரிப்பு ஆதாம் பாவா சார்பில் மூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை தயாரித்துள்ளது.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme