Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
"தாத்தா"குறும்படம் விமர்சனம்!

“தாத்தா”குறும்படம் விமர்சனம்!

Posted on May 7, 2024

நடிப்பு : ஜனகராஜ், இ.ரேவதி, ரிஷி, ஞான ஷ்யாம், மோனிஷ், கயல் தேவராஜ், தீபா, முருகன் மந்திரம், ராயல் பிரபாகர்

இயக்கம்: நரேஷ்

"தாத்தா"குறும்படம் விமர்சனம்!
“தாத்தா”குறும்படம் விமர்சனம்!

இசை: அமினா ரபிக் மற்றும் சந்தோஷ்

தயாரிப்பு : இம்ப்ரஸ் பிலிம்ஸ் – கவிதா.எஸ்

“தாயின் அன்பை கூட வென்று விடுகிறது இந்த தாத்தாவின் அன்பு!!”

“தான் பெற்றா பிள்ளைகளிடம் காட்டிய கஞ்சத்தனத்தை தான் பெறபிள்ளைகளிடம் காட்டுவதில்லை தாத்தா பாட்டிகள்!!”

இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கை முறையினை சாமானிய மக்களுக்கு புரியும் படியாக திரை கதை அமைத்து கதையின் இயல்பு கெடாமல் (சிறந்த நடிகர்களை தேர்வு செய்து) காட்சிகளை நகர்த்தி செல்வதோடு, எதார்த்தமான மனிதர்களின் வாழ்வியலை மிக சிறப்பாக திரையில் குடுபத்தோடு பார்க்கும் படமாக எடுத்ததிற்கு “இயக்குனர் நரேஷ்க்கு மிக விரைவில் வெள்ளி திரையில் ஜொலிக்கா” அனைத்து தகுதியும் உள்ளவராக உள்ளார் இயக்குனர் நரேஷ்.

இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதா.எஸ் தயாரித்து நரேஷ் இயக்கத்தில் “ஷார்ட் ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளிவந்த குறும்படம்”தாத்தா”

இந்த குறும் படத்தில் ஜனகராஜ்,ஏ.ரேவதி, ரிஷி,ஞான ஷ்யாம், மோனிஷ்,கயல் தேவராஜ்,தீபா, முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் (ஏ.ரேவதி)தனியாக வசித்து வருகிறார்

தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார். ஜனகராஜ் மகன் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் செய்து வரும் அவர் தனது மகன் சரணைக் கொண்டு வந்து தாத்தா ஜனகராஜ் வீட்டில் விட்டுச் செல்கிறார். தாத்தா பாட்டி அரவணைப்பில் இருக்கும் பேரன் பக்கத்து வீட்டிற்கு விளையாடச் செல்கிறான். பக்கத்து வீட்டுச் சிறுவன் நண்பனாக இணைய அஜய் ஒரு ரிமோட் காரை சரணிடம் காட்டுகிறான், அது தனது பிறந்தநாளில் தனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான். அதைப் பார்த்தது முதல் சரணுக்குள் அதுபோன்ற கார் தானும் வாங்கவேண்டும் என்று எண்ணம் தோன்ற.எப்படி தாத்தா பாட்டியிடம் கேட்பது என்று முகம் வாடி அமர்ந்திருக்கும் அவனிடம் பாட்டி விசாரிக்கும் போது அந்த ரிமோட் கார் ஆசையைக் கூறுகிறான், தாத்தாவும் தன் பேரனுக்கு அந்தக் காரை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார் அந்த காரை வாங்க கடைக்கு செல்லும் ஜனகராஜ், அதன் விலை ரூ.800-என்று தெரிய வருகிறது. தனது சக்திக்கு மீறிய தொகை என்றாலும் எப்படியாவது பேரனுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்க முயற்சிக்கிறார் அதில் தோல்வி அடைய “தனது பேரனின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற தாத்தாவின் பெரும் முயற்சி திரையில் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது”, தனது இளமைக் காலத்தில் சைக்கிள் பந்தயத்தில் வெற்றியில் கிடைத்த சைக்கிளை விற்க முடிவு செய்கிறார்.ஜனகராஜ் இளமையில் தனது முதல் வெற்றியை தனது பேராகுயந்தைக்கு சமர்ப்பணம் செய்து தனது பேரன் ஆசைப்பட்ட பொம்மை காரை ஜனகராஜ் பேரனுக்கு வாங்கி கொடுக்கிறார். ஆசைப்பட்ட பொருள் கைக்கு வந்ததும் பேரனின் முகத்தில் மகிழ்ச்சியையும், புன்னகையையும் பார்க்கும் தாத்தா, பேரனை விட கூடுதல் மகிழ்ச்சியடைவதை தனது முகத்தில் சிறு புன்னகையோடு வெளிப்படுத்தினாலும், மனதில் அவரது மகிழ்ச்சி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது தாத்தா குறும்படம்.

ஜனகராஜ் தோற்றமும்,உடலும், உடல் மொழியும், குரலும் அச்சு அசலாக அந்த ஏழைத் தாத்தாவாகவே வாழ்ந்துள்ளார், கடந்த கால ஏக்கம்,காதல்,அன்பு, பாசம்,துயரம்,பூரிப்பு என இந்த குறும்படத்தில் அவரது முக பாவனைகள் அனைத்தையும் தனது அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளார்.

பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாம் எதார்த்தமாகவும், இயல்பாகவும் நடித்துள்ளான்

ஜனகராஜின் மகனாக வரும் ரிஷி தமிழ்,மலையாளப் படங்கள் மற்றும் இணைய தொடர்களில் நடித்துள்ள இவர் இந்த குறும்படத்தில் சில காட்சிகளில் வலம் வந்தாலும் தனக்கு கொடுத்த கதா பாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளார்.

வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகன் மந்திரம் நானும் ஒரு நடிகன் தான் என்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த குறும்படம் மூலம் பெருமை சேர்த்துள்ளார்.

பழைய பொருட்கள் வாங்கும் ‘காயலான் ‘ கடைக்காரராக யோகி தேவராஜ் மற்றும் பொம்மைக் கடைக்காரராக வரும் ராயல் பிரபாகர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

இயற்கை ஒளியில் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத் ராஜா.

படத்தின் காட்சிகள் அனைத்தும் இயல்பாகவும் சிறப்பாகவும் பணியாற்றியுள்ளார் கலை இயக்குநர் வீரசமர் .

எடிட்டர் நாஷின் படத்தொகுப்பு அருமை.

அமினா ரஃபீக், சந்தோஷ் ஆகியோரது பின்னணி இசை குறும் படத்திற்கு கூடுதல் பலம்.

தாத்தா படத்தின் இயக்குனர் நரேஷ்க்கு வெள்ளி திரையில் ஜொலிக்கா” அனைத்து தகுதியும் உள்ளவராக உள்ளார் இயக்குனர் நரேஷ்.

“நரேஷ் இயக்கத்தில் ஷார்ட் ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளிவந்த குறும்படம்”தாத்தா” குடுப்பத்தோடு கொண்டாட வேண்டிய படம்!”

"தாத்தா"குறும்படம் விமர்சனம்!-indiastarsnow.com
“தாத்தா”குறும்படம் விமர்சனம்!-indiastarsnow.com

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme