Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஒரு நொடி திரை விமர்சனம்

ஒரு நொடி திரை விமர்சனம்

Posted on April 29, 2024
ஒரு நொடி திரை விமர்சனம்
ஒரு நொடி திரை விமர்சனம்

ஒரு நொடியில் சலூன் கடையில் நாடாகும் தவறு ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதே ஒரு நொடி படத்தின் திரைக்கதை.

ஒரு நொடி திரைக்கதை இரண்டு மர்ம கொலையை முன்வைத்து திரைக்கதை தொடங்குகிறது மதுரையில் அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென காணாமல் போகிறார். தாங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கடன் தொகைக்குப் பதிலாக தங்களின் நிலப் பத்திரத்தை அபகரித்துக்கொண்ட கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) தன் கணவனைக் கடத்தியிருக்கக் கூடும் என்று புகார் அளிக்கிறார் சேகரனின் மனைவி சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). சேகரனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையைக் கையிலெடுக்கிறார் காவல்துறை ஆய்வாளர் பரிதி இளமாறன் (தமன் குமார்).

தனியார் நகைக்கடையில் விற்பனையாளரலாக பணிபுரியும் பார்வதி (நிகிதா) என்னும் இளம்பெண், மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பார்வதியைக் கொன்றது யார் என்பதையும் பரிதியும் அவரது குழுவினரும் விசாரிக்கத் தொடங்குகின்றனர். சேகரன் என்ன ஆனார்? பார்வதியைக் கொன்றது யார்? இதுபோன்ற கேள்விகளுக்கு திரையில் பரபரப்பான பதில் கொடுக்கும் திரை படம் “ஒரு நொடி”.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் தமன் குமார், . நடிப்பிலும் குறை வைக்கவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா சங்கர், கஜராஜ் என தெரிந்த முகங்களோடு பல புதுமுகங்களும் நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே திரையில் ரசிக்கும் படி நடித்துள்ளது மிக சிறப்பு .

ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் தனது கேமரா மூலம் வித்தியாசமான கோணங்களில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
சஞ்சய் மாணிக்கம் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பையும், பதற்றத்தையும் ரசிகர்களிடம் சரியான முறையில் திரையில் இணைத்து பார்ப்பவரை ரசிக்கவைத்துள்ளது ,படத்தொகுப்பாளர் எஸ்.குரு சூர்யா, படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரசிகர்களை கதைக்குள் அழைத்துச் சென்று சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme