Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • *திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’*

*திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’*

admin April 22, 2024

இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா’ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.

குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், “ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் ‘ராஞ்சா’ உருவாகி வருகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத்தொகுப்பை கையாளுகிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஞ்சா’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

***

*C.V. Kumar’s Thirukumaran Entertainment and K. Sambasivam’s Sri Krish Pictures come together to produce Prajan and Ivana Varun-starrer ‘Raanjha’, a love-based detective thriller directed by Santhosh Raavanan*

C.V. Kumar’s Thirukumaran Entertainment, a leading production house known for finding and launching young talents in the film industry, has joined forces with K. Sambasivam’s Shri Krish Pictures for a new movie titled ‘Raanjha’.

Prajan and Ivana Varun are playing the lead roles in the film directed by Santhosh Raavanan who shot to fame with a short film. Athiran Sathish, Padman and Anupama Kumar play key characters.

Speaking about the film, director Santhosh Raavanan said, “The story centers around a young woman, and a series of suspicious deaths take place around her. The film will explore the shocking reason behind those incidents.”

Speaking further, he said, “The power of love is incredible and incomparable. It has the might to create, protect and destroy. We have tried to show on screen the all-powerful love in a new angle, while keeping its nature unchanged.”

‘Raanjha’ has music composed by Hari of ‘Kaalangalil Aval Vasantham’ fame and cinematography by Kishore Ramachandran. Ashwin, the editor of ‘Soodhu Kavvum 2’, is handling the editing of ‘Raanjha’.

The shoot of ‘Raanjha’, produced by C.V. Kumar’s Thirukumaran Entertainment and K. Sambasivam’s Sri Krish Pictures and directed by Santhosh Raavanan is in its final stages. The film’s team is planning to bring ‘Raanjha’ to screens soon.

***

Post navigation

Previous *கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*
Next *On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.