Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஃபைண்டர்’ திரை விமர்சனம் -indiastarsnow.com

‘ஃபைண்டர்’ திரை விமர்சனம்

Posted on April 22, 2024

குற்றவியல் பட்டம் பெற்ற நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது தோழியுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார்,பழவேற்காடு மீனவர் குப்பத்தில் மீன்பிடித் தொழிலைச் செய்து வரும் சார்லி மனைவி மகளுடன், கிடைக்கும் வருமானத்தில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சென்றாயனின் எதிர் காலத்தை பற்றி கவலைப்பமால் காசுக்காக பல்வேறு வழக்குகளுக்கு ஆஜராகி ஜெயிலுக்கு போய் அதன் மூலம் சம்பாதிக்கும் சென்றாயனின் நட்பு சார்லிக்கு இருக்கிறது.

இந்நிலையில் மக்களிடம் சீட்டுப் பணம் பிடித்த பணத்தை சார்லி ஒரு பைனான்ஸ் கம்பெனியை நம்பி ஒப்படைத்து வைத்திருக்க ஒருநாள் திடீரென்று அந்த கம்பெனி மாயமாகிறது. மக்களிடம் பெற்ற பணத்தை திரும்பக் கொடுப்பதற்கு எந்த வழியும் இல்லாமல் சென்றாயன் யோசனைப்படி ஒரு கொலைக் கேசில் ஆஜராகி, பணத்துக்காக உள்ளே போகிறார் சார்லி.

ஆனால் பேசியபடி அவரை வெளியே எடுக்க யாரும் வரவில்லை என்பதோடு அவருக்கு சேர வேண்டிய பணமும் வந்து சேரவில்லை அத்துடன் சென்றாயனும் சிறையில் மரணிக்க, சார்லின் மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள பல வருடங்களுக்கு முன் முடித்து வைக்கப்பட்ட இந்த கேஸை இப்போது ஃபைண்டர் கையில் எடுத்து நீதிக்குப் போராட அதன் விளைவு என்னவாகிறது என்பதுதான் கதை.

நாயகியாக தாரணி,நிழல்கள் ரவி ,வழக்கறிஞர் சரண்ராஜ், பீமா, குரு, காவல்துறை அதிகாரி, ருத்ரசுவாமி, வேளச்சேரி கவுன்சிலர், கவுன்சிலரின் மனைவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் நடிப்பு மூலம் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறார்

ஒளிப்பதிவாளர் பிராசந்த் வெள்ளிங்கிரியின் கேமரா திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது . சூர்ய பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme