’சிறகன்’ திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com
திரைக்கதையின் தொடக்கத்தில் பெண் கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் எம்.எல்.ஏ ஜீவா ரவி மகனை தொலைத்துவிட்டு தேடுகிறார் அப்போது அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் கொலை செய்யப்படுகிறார்கள். இருவரின் கொலை வழக்கு தொடர்பாக பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி கஜராஜை விசாரிக்கையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.
இதையடுத்து, கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், அவ்வபோது மறைந்த தனது தங்கையின் நினைவால் தடுமாறுகிறார். இப்படி பல கதாபாத்திரங்களை சுற்றி வரும் இந்த கொலை வழக்குகளின் பின்னணி என்ன?, எதற்காக இந்த கொலைகள் நடந்தது?, கொலையாளி யார்? என்பதை விழிப்புணர்வோடு சொல்வது தான் ‘சிறகன்
அம்மா இல்லாத மகளைத் தாக்கி கோமாவுக்கு கொண்டுபோன கேடு (பள்ளி மாணவர்களை)கெட்டஇளைஞர்களை பழிதீர்க்க, திட்டம் தீட்டி செயல்படுத்தும் வழக்கறிஞராக கஜராஜ் திரையில் சிறப்பாக நடித்துள்ளார் , தன்னுடன் பணிபுரிகிற ஆசிரியரை, மாணவன் ஒருவன் தவறாக படமெடுத்து மிரட்டும்போது கோவப்பட்ட நாயகி பொளஷி ஹிதாயா, மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து மிரள்கிற ஆசிரியராக ஹர்சிதா ராம், தங்கையை இழந்த சோகத்தை சுமந்தபடி வழக்கு விசாரணையில் சுறுசுறுப்பு காட்டும் வினோத் ஜி டி, அரசியல் பலமிக்கவராக ஜீவா ரவி, அன்பான மனைவியின் உயிர் பிரிய காரணமாக இருந்த நபரை சாதுர்யமாக வேட்டையாடும் ஆனந்த் நாக், பள்ளிப்பருவத்தில் சில மாணவர்களின் காமவெறி தலைக்கேறி குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மாணவர்கள் என அனைவரின் நடிப்பும் திரையில் ரசிக்கும் படி சிறப்பாக உள்ளது .
ராம் கணேஷ் இசையில் கிரைம் திரில்லர் கதைக்களத்துக்கு ஏற்ற சுறுசுறுப்பைத் தந்திருக்கிறது பின்னணி இசை.