Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*’வார்2′ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது

Posted on April 16, 2024

*'வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது
*’வார்2′ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது

‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘வார்’ திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் ‘வார் 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார்.

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கு விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வானியும் நடிக்கிறார். படம் 14, ஆகஸ்ட் 2025ல் வெளியாகிறது.

  • Allu Arjun’s Friendship Day Lesson: Real Success Is Taking Your Friends Along
  • Arnab Goswami to be the Keynote Speaker at the South India Media Summit 2026 in Hyderabad on September 28
  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!
  • Allu Arjun’s Friendship Day Lesson: Real Success Is Taking Your Friends Along
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme