Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது

admin April 12, 2024


ஹைபர் லிங்க் நான் லினியர் கிரைம் திரில்லர் படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது

MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு ” சிறகன் ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்
இசை : ராம் கணேஷ். K
பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.
கலை : ஹரிபிரசாத் பால்
கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு : துர்கா பேட்ரிக்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் – வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர் )

படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ்வராஜ். S பகிர்ந்தவை..

ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.

மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்.

பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும்,
இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால்
இந்த படத்திற்கு ” சிறகன் ” என்று பெயர்வைத்தோம்.

படப்பிடிப்பு முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது என்றார்.

மற்றும் இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வரும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை ஏப்ரல் 20 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Post navigation

Previous *’வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி*
Next *இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.