Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா

திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா

Posted on April 1, 2024

திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா
திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா
சென்னை மேடவாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் தமிழ்வழி பள்ளியில் நேற்று மாலை நடந்த பள்ளியின் 33 ஆம் ஆண்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான தி.வேல்முருகன் அவர்கள், இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி அவர்கள், அற்புதம்மாள் அவர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இப்பள்ளி குழந்தைகள் சிலம்பம், நடனம், பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை செய்து மகிழ்வித்தனர்.

இவ்விழாவில் பேசிய இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இறை.பொற்கொடி அவர்கள் இது போன்ற தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் தொடர்ந்து மோசமான நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் மாணவ சேர்க்கைகள் குறைந்து கொண்டே வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் அவர்கள் இது போன்ற தமிழ்வழிக் கல்வி பள்ளிகளுக்கு அரசு பள்ளிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டுமென்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தன் அடுத்த மாத சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்குவேன் என்று உறுதியளித்தார்

திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா
திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 33 ஆம் ஆண்டு விழா

  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme