Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Cinemakaaran S. Vinoth Kumar presents ’Good Night’ fame Manikandan starrer “Production No: 2” shooting wrapped up!

சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

Posted on March 31, 2024
Cinemakaaran S. Vinoth Kumar presents ’Good Night’ fame Manikandan starrer “Production No: 2” shooting wrapped up!
Cinemakaaran S. Vinoth Kumar presents
’Good Night’ fame Manikandan starrer “Production No: 2” shooting wrapped up!

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.  வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில், ‘குட்நைட்’ படப்புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில்,  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி மேலும் பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்மபித்த படத்தை இப்போது மார்ச் மாதம் முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” என்றார்.

இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி,
கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி,
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்,
தயாரிப்பு: செ. வினோத்குமார்,
நிறுவனத்தின் பெயர்: சினிமாக்காரன்,
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்,
இசை: வைசாக் பாபுராஜ்,
படத்தொகுப்பு: கண்ணன் பாலு,
கலை வடிவமைப்பு: சுரேஷ் கல்லேரி,
சண்டைப்பயிற்சி: தினேஷ் சுப்புராயன்,
உடை வடிவமைப்பு: மீரா,
மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா.

Cinemakaaran S. Vinoth Kumar presents ’Good Night’ fame Manikandan starrer “Production No: 2” shooting wrapped up!
Cinemakaaran S. Vinoth Kumar presents
’Good Night’ fame Manikandan starrer “Production No: 2” shooting wrapped up!

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme