Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
'தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம்-indiastarsnow.com

‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம்

Posted on March 30, 2024
'தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம்-indiastarsnow.com
‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம்-indiastarsnow.com

ஒரு மனிதன் தண்ணீரில் முகத்தை வைத்து குடிக்கிறான். அவர் தனியாக இல்லை. அவருடைய தோழர்களான ஆடுகளை நமக்குக் காட்ட கேமரா ஓடுகிறது. அவர்களில் அவரும் ஒருவர், மனிதனாக இருப்பது என்ன என்பதை மறந்துவிட்ட ஒரு மிருகம்”சவூதி காரன் “.

90 களின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட ஆடுஜீவிதம் ( தி கோட் லைஃப் ) வளமான வளைகுடாவின் வாக்குறுதிக்காக வீட்டை விட்டு வெளியேறும் நஜீப் என்ற இளைஞனின் வேதனையான அனுபவத்தை விவரிக்கிறது. ஆனால் எங்கோ ஏதோ தவறு நடந்து, பாலைவனத்தின் நடுவில் ஆடு மேய்ப்பவனாக முடிவடைகிறான். சம்பளம் இல்லை. ஆடம்பரம் இல்லை. பின்பக்கம் கழுவ தண்ணீர் கூட இல்லை சவுதியில் பணியமதப்படுகின்றனர் .

பாலைவனத்தில் மொழி புரியாமலும் , எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் பிரித்விராஜ்க்கு அங்கு பணிபுரியும் ஒருவர் உதவுகிறார் சில நாளில் அவரும் இறந்து விடுகிறார் பின்பு அவர் வேலையை பிரித்விராஜ் செய்கிறார், சில நாட்கள் கழித்தே தான் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் அடிமையாக்கப்பட்டதை அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்பவர் திடீரென்று ஒரு நாள் தனது முகத்தை புல்லு கட்டு கொண்டுவரும் வண்டியின் கண்ணாடியில் பார்த்து பதறிப்போகிறார். தான் இங்கே வந்து பல வருடங்கள் ஆனதை அப்போது உணர்பவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிய அவரது கால் உடைக்கப்பட்டு திரும்பவும் ஆட்டு கூடாரத்துக்கு கொண்டுவருகிறார் , இது தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்துக்கொண்டு வாழ்பவருக்கு மீண்டும் தப்பிப்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது( அது அவருடன் வந்த பையனுடன் சந்திக்கு வாய்ப்பு ஏற்படுகிறது “மாயையினால்”). இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். மரணத்தோடு போரடிக்கொண்டு பாலைவனத்தில் பயணப்படும் பிரித்விராஜ், பாலைவனம் கடவுளின் இருப்புக்கான ஆதாரமா அல்லது அத்தகைய கருணையுள்ள மனிதர் இல்லை என்பதற்கான ஆதாரமா? நஜீப்பை இரக்கத்துடன் பார்க்கும் ஆட்டின் கண்ணில் கடவுள் வாழ்கிறாரா? அல்லது நஜீப் மீது அரேபியர் தனது கொடூரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு முன்பு கடவுள் இறந்துவிட்டாரா? ஒரு மனிதனின் வாழ்க்கை போராட்டமாக சொல்வதே ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’.

ஏ.ஆர்.ரஹ்மானின் பேயாட்டம் போடும் ‘பெரியோனே’ மீண்டும் ஒருமுறை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே…………

  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme