Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வெப்பம் குளிர் மழை விமர்சனம்-indiastarsnow.com

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

Posted on March 30, 2024

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் பெத்தபெருமாள்(திரவ்). அவரின் மனைவி பாண்டி(இஸ்மத் பானு). திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை.கிராமத்தில் திருவிழாவில் முதல் மரியாதையை (பரிவட்டம் கட்டிக்கொள்ளும் மிக பெரிய குடும்பம் ) அந்த குடுமபத்தில் முத்த மகனுக்கு திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது, அந்த ஊரில் மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் கதையின் நாயகன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, அந்த திருமணம் நடந்து குழந்தை இல்லாததால் அவர்களது தின வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது , இப்படி இருக்கும் சூழ்நிலையில் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர் அதில் சில சோகமான உண்மையும் திரியவருகிறது , ஆனால் இதனை கணவரிடம் சொல்ல மறுத்துவிட்டு ஒரு புதிய முயற்சியை மனைவி மேற்கொள்கிறார் அதனால் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது, நாளடைவில் உண்மை தெரியவர பிரச்சனை வருகிறது, அதனை கதையின் நயகன் எப்படி கையாண்டு வெற்றி பெற்றார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை,

மனைவியாக நடித்துள்ள கதாநாயகி இஸ்மத் பானு தன்னுடைய இயல்பான நடிப்பால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு இதுவே முதல் படமாகும் ஆனால் அது தெரியாதது போல அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார், ஒரு பெண் குழந்தை இல்லாமல் இந்த சமுதாயத்தில் படும் அவமானங்களை இயல்பாக நடித்து திரையில் சிறப்பான நடிப்பின் மூலம் நம்மையும் கண்கலங்க வைத்துள்ளார் மற்றும் ரமா , விஜயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் திரையில் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகின்றனர் .

இசையால் நிறைந்துள்ளது , இந்த படத்திற்கு சங்கர் இசையமைத்துள்ளார், பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது, ஒரு கிராமத்தை மிக அழகாக ஒளிப்பதிவாளர் பிரித்வி காட்டியுள்ளார், படம் நம்மோடு ஒன்ற விட்டது அது போல ஒரு சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளார்,

  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme