ரெபல் திரை விமர்சனம்

ரெபல் திரை கதை மூணாறில் தொடங்கி கேரளாவில் உள்ள அரசு கல்லுரியில் படம் முடிகிறது .
ரெபல் திரை கதை 1980 பதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ரெபல் .
மூணார் மலை பகுதியில் தேயிலை தோட்டங்களில் கூலிகளாக பணியாற்றி வரும் மக்கள் அவர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் அதற்கு படிப்பு தான் மூலதனம் என்று முடிவு செய்து பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு செல்கிறார்கள் ஆனால், அந்த கல்லூரியிலும் (விடுதியில் ) சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு (பறிக்கப்படுகின்றர்த்து )கிடைப்பதில்லை. அதேபோல், கல்லுரி கேரளப்பகுதியில் இருப்பதால் கேரளா மாணவர்களின் அதிகமும் அடக்கு முறையும் மேலோங்குகிறது இவற்றை சகித்துக்கொண்டு எப்படியாவது படிப்பை முடித்துவிட வேண்டும், என்று அடங்கிப் போகும் தமிழ் மாணவர்கள், ஒரு கட்டத்தில் “நாயகனின் ” நண்பனை அடித்து கொன்றுவிடுகின்றனர் கேரளா மாணவர்கள் அப்போது தமிழ் மாணவர்கள் பொறுமை இழந்து ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் தமிழ் மாணவர்கள் புரட்சியில் ஈடுபடுகிறார்கள் இவர்களை எதிர்த்து கேரளா இரண்டு அரசியல் பிரிவு தலைவர்கள் மற்றும் கேரளா மாணவர்களின் இரண்டு பிரிவினர் அடக்குமுறைக்கு தமிழ் மாணவர்கள் முற்றுப்புள்ளி வைத்ததா? அல்லது கேரளா அரசியல் தலைவர்களின் அடக்கு முறைக்கு அடிபணிந்து படிக்க வேண்டும் என்ற தமிழ் மாணவர்களின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? என்பதை சொல்வது தான் ‘ரெபல்’.
நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுவின் காந்தியின் நாயகையாக சிறப்பாக நடித்துள்ளார் .
கதையின் நாயகனாக நடித்திருக்கும் (வாய்ந்து இருக்கும் ) “ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பு ரெபல் திரைப்படத்துக்கு தனிச்சிறப்பு” ,
கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், சுப்பிரமணிய சிவா,தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி இவர்களின் நடிப்பு திரையில் தனி சிறப்பு.
மலையாள மாணவர்கள் இரண்டு அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை “அனைவரின் சிறப்பான நடிப்பு ” வசனங்கள் மூலம் ஏழை மக்களின் மீதான அடக்குமுறையை புரட்சிகளின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறார். இயகிகுநர் நிகேஷ் ஆர்.எஸ், இயக்குனரின் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரை ஹீரோவாகவும் ,இசை அமைப்பாளராகவும் ரெபல் திரைப்படத்தை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்று திரையில் மக்களை கொண்டாட வைத்துள்ளது என்றால் மிகையாகாது .
‘ரெபல்’ திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு மிகவும் அருமை குறிப்பாக கதையின் நாயகியை “நாயகன் பார்க்ககும் போதெல்லாம் கேமராமேன் சிறப்பாக நாயகியை கண் ,புருவம் ,உதடு என்று நாயகியை நாயகன் ரசித்தரோ இல்லையோ கேமராமேன் சிறப்பாக ரசித்துள்ளார் “திரையில் காண்போரும் ரசிக்கும் விதமாக ஒளிப்பதிவு மிகவும் அருமை ”