உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு AINU சென்னை மருத்துவமனை, தமிழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் கொடி அசைக்க, தனது 2வது சிறுநீரக ஆரோகியத்திற்கான விழுப்புணர்வு ஓட்டத்தை தொடங்கியது.


இதில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறுநீரக நோய்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வை பெற்றனர்
சென்னை 10 மார்ச் 2024: இந்தியாவின் முன்னணியில் மற்றும் சென்னயின் மிகப்பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU சென்னை) மருத்துவமனை, மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு தனது 2 வது சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது . ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரக பராமரிப்பிற்கான விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.
திரு.மேகநாதன் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், திரு. சிரதீப் தத்தா, சிஓஓ, ஏஜி&பி பிரதம் மற்றும் AINU மருத்துவமனையின் மூத்த நிர்வாகப் பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மதிப்பிற்குரிய நடிகர் சந்தோஷ் பிரதாப் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . இதில் பொது மக்கள் அனைவரும் பேரார்வத்துடன் கலந்து கொண்டனர் .
குழந்தைகள், ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சென்னை முழுவதிலும் உள்ள தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களை ஈர்த்த இந்த மாரத்தான் பலதரப்பட்ட மக்களின் ஆர்வத்தை ஒன்றிணைத்தது . ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் என்று நான்கு குழுக்களாக வரையறுக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒவ்வொரு குழுவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன .
உடலின் வலுவை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ள எனக்கு .AINU சென்னை மருத்துவமனையின் இந்த மாபெரும் முயற்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தமிழக திரைப்பட நடிகர் திரு சந்தோஷ் பிரதாப் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கூறினார் . இது போன்ற பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் AINU மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்றும் கூறினார் .
AINU சென்னையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் அருண் குமார் அவர்கள் பேசுகையில் , இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கு பெற்று பேராதரவை வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். ஒரு அறிகுறியும் இல்லாமல் தொடங்கும் CKD என்று பொதுவாக
அழைக்கப்படும் தீவிரமான சிறுநீரக நோய் என்பது ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் படிப்படியாக மோசமடைந்து சிறுநீரக செயல்பாட்டையே பாதித்துவிடும் நிலையை அடைந்து விடும் . உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய், உடற்பருமன் , புகைப்பிடித்தல் மற்றும் குடும்பத்தில் ஏற்கனவே உள்ள சிறுநீரக நோய் வரலாறு போன்ற பல காரணங்கள் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கிறது . நம்மிடம் நிலவி வரும் இந்த அபாயகரமான நோயை ஒழித்து சமூகத்தில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக நோயை பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பரப்புவதற்காக நாங்கள் நடத்தும் 2 வது விழிப்புணர்வு ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சார ஓட்டத்தில் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் ஆர்வமான பங்களிப்பை மனமார பாராட்டுகிறேன் என்று கூறினார் .
நடந்து வரும் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக , AINU மருத்துவமனை இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU சென்னை ) நிறுவனத்தை சேர்ந்த நெஃப்ராலஜி மருத்துவ ஆலோசகர் டாக்டர் நவீனாத் பங்கு கொண்ட ” மருத்துவருடன் கலந்துரையாடல் ” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது . இந்த நிகழ்ச்சியில் MCC ஸ்கூலை சேர்ந்த 500 மாணவர்கள் ,ஆசிரியர்கள் , துணை பணியாளர்கள் ஆகியோர் பங்கு கொண்டு சிறுநீரகங்களை பாதிப்பு ஏற்படாமல் நீண்டகாலம் எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வை பெற்றார்கள் . அதுவும் கோடைகாலம் நெருங்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அவர்களுக்கு பெரும் உதவி அளிப்பதாக இருந்தது .
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு தொடர்ந்து நடத்தி வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் AINU சென்னை நிறுவனம், தனிநபர்கள் சிறுநீரக சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்கு வழி நடத்தி ஆரோக்கியமான சமூக எதிர்காலத்தை உருவாக்க பாடுபடுகிறது . சிறுநீரக பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை தொடர்ந்து நடத்தி சிறுநீரக நோயில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியின் வெற்றியை இந்த சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தின் மாபெரும் வெற்றியானது குறிக்கிறது.
AINU பற்றி:ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி என்பது இந்தியாவில் உள்ள ஒரு உலக தரம் வாய்ந்த சூப்பர்-ஸ்பெஷாலிட்டி சிறுநீரக பராமரிப்பு மையம் . சமீபத்தில் இது ஏசியா ஹெல்த்கேர் ஹோல்டிங்ஸ் (AHH)நிறுவனத்தால் சொந்தமாக்கி கொள்ளப்பட்டது . இந்த நிறுவனம் ஹைதராபாத், விசாகப்பட்டினம் , சிலிகுரி மற்றும் சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களில், மொத்தம் 500 படுக்கை வசதிகளை கொண்டு, முன்னணியில் உள்ள பல சிறந்த நெஃப்ராலஜிஸ்டுகள் மற்றும் யூரோலஜிஸ்டுகள் குழுவுடன் கூடிய 7 மருத்துவமனைகளில் இதுவரை லட்சத்திற்கும் மேலான நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்துள்ளது .நெஃப்ராலஜி மற்றும் யூரோலஜி துறையில் மருத்துவ சிகிச்சைகளில் அவர்களுக்கு உள்ள நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் யூரோ-ஆன்காலஜி, புனரமைப்பு சிறுநீரக சிகிச்சை , குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறுநீரக பராமரிப்பு , ஆண்ட்ராலஜி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் போன்ற பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது . இது இந்தியாவின் முன்னணி ரோபோடிக் அறுவை சிகிச்சை நிறுவனமாகும் . AINU நிறுவனம், NABH, DNB (நெஃப்ராலஜி & யூரோலஜி), மற்றும் FNB (மிகக்குறைந்த அளவு துளையுடனான யூரோலஜி அறுவை சிகிச்சை ) ஆகியவற்றிலிருந்து அங்கீகாரம் பெற்றுள்ளது. சிறுநீரக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு சிறுநீரக சிகிச்சைக்காக 1,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது AINU நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது