Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • ‘லால் சலாம்’ விமர்சனம்

‘லால் சலாம்’ விமர்சனம்

admin February 9, 2024
‘லால் சலாம்’ விமர்சனம்

‘லால் சலாம்’ விமர்சனம்

‘லால் சலாம்’ விமர்சனம்-indiastarsnow.com
‘லால் சலாம்’ விமர்சனம்-indiastarsnow.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,விஷ்ணு விஷால்,விக்ராந்த்,கபில்தேவ்(சிறப்புத் தோற்றம்),ஜீவிதா,அனந்திகா சனில்குமார்,செந்தில்,கே.எஸ்.ரவிக்குமார்,லிவிங்ஸ்டன்,நிரோஷா,தம்பி ராமையா,ஆதித்ய மேனன்,விவேக் பிரசன்னா,தன்யா பாலகிருஷ்ணா,தங்கதுரை நடித்துள்ளனர்.

‘லால் சலாம்’ திரைக்கதை 1993-ல் நடப்பதால், அந்தச் சூழலில் நடந்த விஷயங்களையும் கதைக்குப் பயன்படுத்தி உள்ளது திரைக்கதைக்கு மிக சிறப்பு . ரஜினி சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வருவது திரைக்கதைக்கு மிக பலம் .

இந்துகளும் இஸ்லாமியர்களும் அண்ணன் – தம்பிகளாக பழகும்கிராமத்தில் இருந்து மும்பை சென்று துணி உற்பத்தி செய்யும் தொழிலதிபராக இருக்கிறார் மொய்தீன் பாய் (ரஜினி). இவர் மகன் சம்சுதீன் (விக்ராந்த்) ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முயற்சித்து வருகிறார். ரஜினியின் நண்பர் (லிவிங்ஸ்டன்) மகன் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்) கிராமத்தில் கிரிக்கெட் அணியை நடத்தி தொடர் வெற்றி குவிக்கிறார்.அவரை வீழ்த்த நடக்கும் சதியால், கிரிக்கெட்தொடரில் மதக்கலவரம் நடைபெறுகிறது . இதனால் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்) ஊரே வெறுக்க, உள்ளூர் அரசியல்வாதியின் தூண்டுதலால் கோயில் தேர்த் திருவிழாவும் தடைபடுகிறது. கிராமத்தில் எல்லா விஷயங்களிலும் அங்கமாக இருக்கும் ரஜினி, மதநல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்பட என்ன செய்கிறார் என்பது ‘லால் சலாம்’ திரைக்கதை.

மதநல்லிணக்கத்தை மையமாக கொண்டு ‘லால் சலாம்’ கதைக் களத்தை, படமாக இயக்கி இருக்கும் ஐஸ்வர்யாரஜினிகாந்தைப் பாராட்டலாம். மக்களின் வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் என்னென்ன அரசியலை செய்கின்றனர், ஒரு விஷயத்தை எப்படி ஊதி பெரிதாக்குகின்றனர் என்பதை கச்சிதமாகவே படமாக்கி இருக்கிறார். ஒரு கிராமத்தில் நடக்கும் தேர்த் திருவிழா என்பது பண்டிகைக்கு நிகரான விழா என்பதை அழுத்தமாகச் சொல்லியிருகிறார் இயக்குனர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்.

மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந் படத்தைமுழுமையாகத் நடித்து தாங்கிப் பிடிக்கிறார்.குடும்ப பாச சென்ட்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந் நடிப்பு திரையில் மிக சிறப்பு , மகனுக்கு ரஞ்சி அணியில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவது, மகனின் எதிர்காலம் பாழாய்போகும் இடத்தில் உருகுவது என எல்லா இடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினிகாந். நாயகி அனந்திகாவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் . பூசாரி செந்தில், விஷ்ணுவின் மாமா தம்பி ராமையா, அரசியல்வாதியாகவும் வில்லனாகவும் வரும் விவேக் பிரசன்னா, போஸ்டர் நந்தகுமார், கபில்தேவ்(சிறப்புத் தோற்றம்) ஆகியோர் நடிப்பில் திரையில் ரசிக்கவைத்துள்ளார் .

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு ராமசாமி ஒளிப்பதிவில் திரையில் ரசிக்கவைத்துள்ளார் . பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பில் மத ஒற்றுமையை பேசும் ‘லால் சலாம்’ படத்திற்கு அனைத்து மதத்தினரும் சலாம் போட வைக்கிறது.

Post navigation

Previous ‘லவ்வர் ‘ திரை விமர்சனம்
Next இமெயில் விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*
  • News

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*

April 27, 2026
*பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*
  • News

*பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*

April 27, 2026
பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*
  • News

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*

April 27, 2026
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.