Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பணியின் போது சிறப்பாக செயல்பட்ட 13 காவலர்ருக்கு சென்னை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Posted on August 31, 2019

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 13 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, தி.நகர், CIT நகர், ஸ்ரீராம்பேட்டையில் வசிக்கும் கணேஷ், என்பவர் TN07 AD 1993 பதிவெண் கொண்ட ஆட்டோவை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு பாரிமுனை சிக்னல் அருகில் செல்லும்போது 4 பேர் கணேஷின் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோ பிராட்வே, செம்புதாஸ் தெருவில் சென்ற போது ஆட்டோவில் உள்ள 4-பேர் ஓட்டுநர் கணேஷை கழுத்தை நெறித்து பணம் கேட்டபோது, பணமில்லை என்றவுடன் கணேஷின் செல்போனை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்ற போது அப்போது பாதுகாப்பு ரோந்து பணியிலிருந்த எஸ்பிளனேடு தலைமை காவலர்கள் வெங்கடேசன், மந்திரமூர்த்தி ஆகியோரிடம் ஆட்டோ ஒட்டுநர் கணேஷ் நடந்தவற்றை கூறியதையடுத்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து சென்று பிடித்ததில் எண்ணூர், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, சுரேஷ்குமார், சூர்யா, வினோத், ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அடையார் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 குற்றவாளிகளை கைது செய்து 90 சவரன் தங்க நகையை மீட்ட மடிப்பாக்கம் ஆய்வாளர் .மகேஷ்குமார், மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் ஐயப்பன், கானாத்தூர் தலைமைக்காவலர் விஜயகுமார் பள்ளிக்கரணை காவலர்கள் வீராசாமி மடிப்பாக்கம் காவலர் ராமலிங்கம், ஜெபசிங் பழவந்தாங்கல் காவலர் நாராயணன் பாலமுருகன், வசந்தராஜ் ஆகியோரும்

பெசன்ட் நகர் கடற்கரையில் வாலிபரிடம் செல்போன் பறித்த நபரை பிடித்து கைது செய்த தலைமைக்காவலர்கள் ரமேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஆகியோர் பணியின் போது சிறப்பாக செயல்பட்டதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஏ.கே.விஸ்வநாதன், அவர்கள் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
  • ‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme