Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • சலார்-பார்ட் 1 திரை விமர்சனம்

சலார்-பார்ட் 1 திரை விமர்சனம்

admin December 23, 2023
சலார்-பார்ட் 1 திரை விமர்சனம்-indiastarsnow.com

சலார்-பார்ட் 1 திரை விமர்சனம்-indiastarsnow.com

சலார்-பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படதில் “கான்சார்” நவீன ஆயுதங்கள், ராணுவம், தனி சட்டத் திட்டங்களுடன் ‘கான்சார்’ என்ற நாட்டில் மூன்று மன்னர்கள் மூன்று பிரிவக உள்ளது அதனை “தேவாவின் வம்சதில் அனைவரும் கொன்றும்” இரண்டாவது பிரிவினை மிரட்டியும் ராஜமன்னார் (ஜகபதி பாபு) என்ற அரசனின் தலைமையில் ஆளப்பட்டு வருகிறது. ராஜமன்னாரின் மகனான வரதராஜா ராஜமன்னாரும் (ப்ரித்விராஜ்) தேவாவும் (பிரபாஸ்) உயிர் நண்பர்கள். சிறுவயதாக இருக்கும்போது, தேவாவின் அம்மாவுடைய (ஈஸ்வரி ராவை) ராஜமன்னார் படையினர் சிறை பிடிக்க வருகின்றனர் அப்போது , தன் தந்தையின் கட்டளையையும் மீறிக் காப்பாற்றுகிறான் வரதராஜா. “நாம போயிடுவோம். இனி இந்த நாட்டிற்கு நாம வரக் கூடாது” என சத்தியம் செய்யக் கேட்கும் அம்மாவையும் மீறி, “நீ கூப்பிட்டா நான் வருவேன்” என தன் நண்பன் வரதாவிற்கு சத்தியம் செய்துவிட்டு கான்சாரை விட்டு வெளியேறுகிறான் 10 வயது தேவா.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, வரதாவுக்கு ஒரு பிரச்னை வர, மீண்டும் கான்சாருக்குள் நுழைகிறார் தேவா. அப்படி வரதாவுக்கு என்ன பிரச்னை, அதை தேவா எப்படி எதிர்கொள்கிறான்,

சலார் படத்தின் மொத்த ரன் டைம், 2 மணி நேரம் 52 நிமிடங்கள். அதில் 2 மணி நேரம் சண்டை காட்சிகளே நிரம்பியிருக்கிறது. ஒரு அரை மணிநேரம், ஸ்லோ மோஷன் காட்சிகளும், பில்ட்-அப் காட்சிளும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 3 படங்களும் பெரியளவில் வெற்றிபெறதா நிலையில் சலார் படத்தின் வெற்றியை அவர் மலைபோல் நம்பி இருக்கிறார். இந்த நிலையில், சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக திரையிடப்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு தன் தாயின் அஸ்தியை கரைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தன் தந்தைக்கு தெரியாமல் இந்தியாவுக்கு வரும் ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) ஒரு கும்பல் துரத்துகிறது. அவரிடமிருந்து ஆத்யாவை காப்பாற்றி தனது கண்காணிப்பில் வைத்து பாதுகாக்கிறார் தேவா. ஆனால், தேவாவை எந்த தகராறுக்கும் செல்லவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அவரது தாய்.

தன்னை துரத்தும் கும்பல் யார் என்ற கேள்விக்கான தேடலில் ஆத்யாவுக்கு தேவா – வரதா பற்றிய ஃப்ளாஷ்பேக் பிலால்(கோபி ) தெரிவிக்கிறார் . சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்படாத தனி ராஜ்ஜியமாக திகழ்ந்து வரும் “கன்சார்” நகரத்தின் அரசர் ராஜமன்னார் (ஜகபதி பாபு) தனது மகனான வரதாவை அடுத்த அரசனாக அறிவிக்க நினைக்கிறார். அவரது இந்த முடிவு, கன்சாரின் அமைச்சர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சியை கவிழ்க்கவும், வரதாவை கொல்லவும் உலகம் முழுவதுமிலிருந்து பல்வேறு படைகளை வரவழைக்கின்றனர். ஆனால் தேவாவிற்கும் கான்சாருக்கும் உள்ள உறவு என்ன, தேவாவின் வருகை கான்சாரை எப்படித் திருப்பிப் போடுகிறது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் தன் ஸ்டைலில் ஒரு ஆக்‌ஷன் திரைக்கதையை அமைத்து ரத்தம் தெறிக்கத் தெறிக்க கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல் .

சலார் படத்தில் மைம் கோபி, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ் எனத் துணை கதாபாத்திரங்களின் அணிவகுப்பில் ஈஸ்வரி ராவின் பாத்திரப் மிக சிறப்பு . ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜு, ஜான் விஜய், ரமணா என அனைவரும் திரைக்கதைக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

இயக்குனர் பிரஷாந்த் நீலின் பிரத்யேக திரைக்கதைக்கு தொழில்நுட்ப குழுவின் பங்களிப்பு மிகவும் சிறப்பு புவன் கவுடாவின் ஒளிப்பதிவு பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகல் திரையில் பிரமாண்ட டிரோன் ஷாட்கள் என எல்லா இடங்களிலும் பிரமாதமாக வேலை செய்திருக்கிறது. வெள்ளித்திரையில் “கறுப்பு – வெள்ளை – ரத்தச் சிவப்பு” மட்டுமே நிரம்பியிருக்கும் உலகத்துக்குக் கச்சிதமாக உருவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பு திரையில் மிக சிறப்பு , ரவி பஸ்ருரின் பின்னணி இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் (சண்டை கட்சியோடு ரசிக்கவைத்துள்ளது ).

“இளைஞர்களுக்கு மிக சிறப்பான திரை விருந்து இந்த (பிரபாஸ்ன்) சலார்-பார்ட் 1” .

Post navigation

Previous அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!
Next ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி” வார இறுதியில் 40% – 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது!!*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*
  • News

*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.