Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

Posted on November 10, 2023

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இரண்டு மணி நேரம் 50 நிமிட படத்துடன் நம்மை ஒன்ற வைத்து கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படத்தின் கதை, 1973இல் தொடங்குகிறது. மதுரையில் பிரபல ரெளடியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வருகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

மதுரையின் பிரபல ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன், தென் மாவட்டங்களை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி ‘அல்லியன் சீசர்’ கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ். சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு செல்லும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்லியன் சீசரை கொன்றால் சிறையிலிருந்து விடுதலை, அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலை என இரண்டு ஆஃபர் வருகிறது. உள்கட்சி அரசியல் – காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பகடைக்காயாக அனுப்பி வைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா, சீசரை கொல்ல சினிமா எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா கையில் எடுத்த காரியம் நிறைவடைந்ததா, லாரன்ஸ் சுதாரித்தாரா, இவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சினிமாவாக மதுரை மணக்கும் ஜிகர்தண்டா விருந்து படைத்திருக்கிறார்கள் கார்த்திக் சுப்பராஜ்.

மிரட்டும் ரவுடி, ஈகோ தலைதூக்கி ஹீரோவாக ஆசைப்படுவது, டைரக்டர் வேட்டை நடத்துவது, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பாணியில் திரையரங்கில் ரவுடிகளை போட்டுத் தள்ளுவது என முதல் பாதியில் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஆங்காங்கே யோசிக்க வைத்தாலும் கார்த்திக் சுப்பராஜின் ட்ரேட் மார்க் மதுரை ரவுடியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

விடுதலை தேடி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு லாரன்ஸிடம் மாட்டும் இயக்குநர் ‘ரே’ சாராக எஸ்.ஜே.சூர்யா. வழக்கம்போல் திரையை தன்னுடையதாக்கி கபடியாடியிருக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாகி, பின் சத்யஜித்ரே மாணவராக அறிமுகமாவது, ரத்தத்தை பார்த்து நடுங்கிக்கொண்டே ஷார்ப்பான பார்வை, மிடுக்கான தோற்றத்துடன் ரவுடி சீசரை நம்ப வைப்பது என தன் நடிப்பால் ரசிகர்களுக்கு ‘டபுள் எக்ஸ்’ ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

சைக்கோ போலீசாக வரும் நவீன் சந்திரா திரையில் ஈவு இரக்கம் பார்க்காத கொடூர வில்லனாக கோலிவுட்டில் அதகள என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர நாயகி நிமிஷா சஜயன், சத்யன், ஷைனி சாக்கோ, இளவரசு என தங்களது பாத்திரங்களை அனைவரும் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

முதல் பாகம் தந்த கமர்ஷியல் வெற்றி, எதிர்பார்ப்புகளை இரண்டாம் பாகத்தில் பூர்த்தி செய்ததுடன், மூன்றாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்!

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் அதில் ஒலிக்கும் பறை இசையும் சும்மா பட்டையை கிளப்புகிறது. மதுரை மற்றும் காட்டுப் பகுதி என கேமராவின் வொர்க் அபாரம்

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme