Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Leo (லியோ) திரை விமர்சனம்-INDIASTARSNOW.COM

Leo (லியோ) திரை விமர்சனம்

Posted on October 19, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள Leo (லியோ) படத்தில் விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது

இமாச்சல பிரதேசத்தில் தான் குடும்பம் பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (விஜய்). காஃபி ஷாப் வைத்திருக்கும் (லியோ டாஸ்), ஊருக்குள் நுழைந்து விடும் காட்டு விலங்குகளை பிடிக்கும் அனிமல் ரெஸ்க்யூவராகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை ஊருக்குள் நுழையும் கழுதைப்புலியை கொள்ளாமல் உயிருடன் பிடிப்பதால் ஊர் மக்களிடம் நாயகனாக திகைக்கிறார் பார்த்திபன் (விஜய்). இன்னொரு பக்கம் படத்தின் முதல் கட்சி மிஷ்கின் குழு ஒரு குடுப்பத்தை கொள்கின்றனர் மற்றும் தனக்கு வேலைகொடுத்தவர் பணம்கொடுத்து உதவாதத்தால் செயற்கையாக விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் பார்த்திபன் தன்னையே அறியாமல் லியோ வாக மாரி ஒட்டுமொத்த கும்பலையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார் லியோ.

சிறைக்குச் சென்று வெளியே வரும் பார்த்திபன் (விஜய்) புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன லியோ தாஸ் தான் பார்த்திபனா என்பதை தெரிந்து கொள்ள இமாச்சல பிரதேசத்திற்கு வருகின்றனர் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஆண்டனி தாஸும் (சஞ்சய் தத்) அவரது தம்பி ஹரால்ட் தாஸும் (அர்ஜுன்). இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா, இறந்துபோன லியோ யார், கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘லியோ’ திரைக்கதை.

லியோ டாஸ் , பார்த்திபன் ஆகிய இரண்டு கேரக்டர்களுக்கும் விஜய் திரையில் வித்தியாசம் காட்டி தனது நடிப்பினை சிறப்பாக கொடுத்துள்ளார் . லியோ(விஜய் )- சத்யா (த்ரிஷா)இடையிலான கெமிஸ்ட்ரி பல வருடங்களுக்குப் பிறகும் கூட சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது திரையில் விஜய் (லியோ டாஸ் ) நடிப்பு சிறப்பு அவரது குடும்பத்தைச் சுற்றி நகரும் காட்சிகள் திரையில் விஜய் – த்ரிஷா ஜோடி மிகவும் அழகாக ரசிக்கும் படியாக உள்ளது.

வனத்துறை அதிகாரியாக வரும் கவுதம் மேனன் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு திரையில் ரசிக்கும்படியாக நடித்துள்ளார் கவுதம். அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்,மனோஜ் ஒளிப்பதிவு அபாரம்.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme