Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வரவேற்பை குவிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘லேபில்’ வெப் சீரிஸ் டிரெய்லர் !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ வெப் சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

Posted on October 19, 2023

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபில்’ சீரிஸின் எதிர்பார்ப்புமிக்க டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று வெளியான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும்
வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் “லேபில்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதன் இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme