Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது

Posted on August 29, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டோனி, உலக கோப்பை தொடருக்கு பின் அவரின் ஓய்வு தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலையும் டோனி தெரிவிக்கவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன் டோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.
இந்நிலையில் டோனி தற்போது இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான கேதர் ஜாதவ் உடன் அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கேதார் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் அதில், அனைவருக்கு தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள் என்று கேதர் ஜாதவ் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவானது தற்போது டோனி ரசிகர்கள் இடையே மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்
  • *100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!*
  • Aura 10/10 Crosses 100 Million Views, Emerges as a Global Mega Hit!
  • *AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!*
  • *Chennais Amirta International Institute of Hotel Management Students honour Hon’ble Chief Minister Shri. C. Joseph Vijay
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme