Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கடாட்சம் படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா

கடாட்சம் படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted on October 9, 2023

கடாட்சம்
———————————-
தாவரங்கள் ஆராய்ச்சியும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றியும் கதை
———————————————–
சிறப்புத் தோற்றத்தில் பாக்யராஜ் நடிக்கிறார்
——————————————-
கலைக் கல்லூரி மாணவர்கள் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லும்போது காட்டுப் பகுதியில் அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதையின் கரு.

இயற்கை வளங்களை ஒவ்வொருவரும் நமக்காக எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியில் வாழ்வு ஒவ்வொரு உயிரினங்களுக்காகவும் பாதுகாக்க வேண்டும் என்ற மையக்கருத்தை இப்படத்தில் வைத்துள்ளனர்.

சிவசக்தி முனீஸ்வரர் பிலிம்ஸ் சார்பில் சியாமளா ரமேஷ் தயாரிப்பில் பட்டுக்கோட்டை சிவா இயக்கியிருக்கின்றார்

படத்தின் கதாநாயகனாக கார்த்திக் சரண் நடிக்க கதையின் நாயகியாக மகானா நடித்திருக்கிறார். இவர் கருமேகங்கள் கலைகின்றன,வா வரலா வா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிறப்புத் தோற்றத்தில் பாக்யராஜ் நடிக்க நிழல்கள் ரவி,கஞ்சா கருப்பு,பெஞ்சமின், ராட்சசன் யாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-
கே.எஸ்.பழனி

இசை-வாரன் சார்லி பாடல்கள்-
சரவணன் பெரியசாமி
ஞானக்கரவேல்

நடனம்- சாய் செல்வி
சண்டை பயிற்சி-
குபேரன்

மக்கள் தொடர்பு வெங்கட்

தயாரிப்பு-
சியாமளா ரமேஷ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்- பட்டுக்கோட்டை சிவா

முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் நகைச்சுவை அம்சமும் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு திருச்சி துறையூர், திண்டுக்கால் சிறுமலை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் 45 நாட்களில் மூன்று கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

நான் தொலைகிறேன் ஏன் அலைகிறேன்…
என்ற தந்தை மகன் பாடலும் தொடுவானம் தான் தொலைதூரம் தான்…என்ற மெலடி பாடலும் கேட்க தூண்டும்.

மேலும் இயற்கை வளங்களை ஒவ்வொருவரும் நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்காகவும் பாதுகாக்க வேண்டும் என்ற மையக்கருத்தை இந்த படத்தில் வைத்ததோடு இயற்கையை பாதுகாப்போம் என்ற பெயரில் கடாட்சம் பட குழுவினர் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை இயற்கை பாதுகாக்க விழிப்புணர்வு சுடர் ஓட்டம் நடத்தப் போவதாக கடாட்சம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme