Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை!!

Posted on August 29, 2019

டில்லியில்,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அப்போது அவர் பேசுகையில்; அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டும் என்றும் தாமதமாக வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அரசு ஆலோசகர், அல்லது கமிட்டிகள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் பணியமர்த்த வேண்டாம் என்றும் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்துயுள்ளார்.

திறமையானவர்களை மட்டுமே அப்பதவியில் நிர்ணயிக்க வேண்டும். ஊடகங்களில் பேட்டி அளிக்கும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் திட்டங்கள், உண்மைகளை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத கருத்துகளை கூறக்கூடாது. பொதுமக்களிடமும் அதை கடைபிடிக்க வேண்டும். அதேபோல், பொதுவெளியில் பேசும்போது கூறும் கருத்துகளில் கவனமாக இருக்கும்படியும் அமைச்சர்களிடம் எச்சரித்துள்ள பிரதமர், நிறைவேறக் கூடிய வாக்குறுதிகளை மட்டும்தான் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனி நபர் ஒழுக்கம், கண்ணியம் போன்றவைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி இந்த மதிப்பீடுகளை தாமும் தவறாமல் கடைபிடித்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் இடையே சிறப்பான ஒத்துழைப்பு இருப்பது அவசியம். இதனால் நிர்வாக திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் முடியும் என்றார்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சிகளைத் தொடருமாறும் பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற தமது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் அமீர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme