Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சித்தா திரை விமர்சனம்

சித்தா திரை விமர்சனம்

Posted on September 28, 2023

திண்டுக்கல் மாவட்டதில் பழனி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக ( சூப்பர்வைசர் ) பணிபுரிகிறார் (ஈஸ்வரன்)சித்தார்த் தனது அண்ணன் இறந்து விட்டதால் அவரது மனைவி மற்றும் அண்ணனின் பெண்குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த குழந்தையை தினசரி பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவது இவரது முக்கிய பணிகளில் ஒன்றாகும். அந்தக் குழந்தையும் சித்தார்த் மீது அதீத பாசம் கொண்டு “சித்தா” என்று அழைக்கிறது.

நண்பனின் அக்கா மகளும் அதே பள்ளியில் படித்து வருகிறார். இரண்டு குழந்தைகளும் தோழிகள் என்பதால், அந்தப் பெண் சித்தார்த்தின் அண்ணன் மகளை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மான் பார்க்க செல்ல முடிவெடுத்து, ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்கிறார்கள். ஆனால் இறுதியில் சித்தார்த்தின் அண்ணன் மகள் இறங்கி விடுகிறார். மறுநாள் அந்தப் பெண் இவரிடம் பேசாமல் இருக்கிறார்.

அதனால் பள்ளி முடிந்து வெளியே இரண்டு குழந்தைகளும் வருகின்றனர். சித்தார்த் திடம் அண்ணன் மகள் என் தோழி என்னோடு பேச மறுக்கிறாள் என கூற, தனது அண்ணன் மகளை பள்ளியிலேயே விட்டுவிட்டு நண்பனின் அக்கா மகளை பைக்கில் அழைத்துச் செல்கிறார் சித்தார்த் . அப்போதும் அந்தப் பெண் நடுக்கமாகவே எதுவும் பேசாமல் வீட்டிற்கு செல்கிறார். பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக சித்தார்த் மீது பழி சுமத்தப்பட்டு அவரை தாக்குகிறார்கள்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதுபோல், இரண்டாம் பாதியில் மக்களுக்கு செல்போனில் கேம் விளையாடும் குழந்தைகள், இக்கட்டான சூழலில் பெற்றோருக்கு போன் செய்யாமல் இருப்பதும், பாலியல் குற்றவாளிகளுக்கு தடயங்கள் இல்லாமல் குற்றங்கள் புரிவது போன்ற காட்சிகள் திரைக்கதையில் மிகப்பெரிய விழிப்புணர்வு திரைபடம் .

நடிப்பிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சித்தார்த், தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது, மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார் சித்தார்த்.

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme