Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்*

எஸ் பி சரண் தொடங்கி வைத்த ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையம்*

admin September 9, 2023

*
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.

இன்றைய சூழலில் கலைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலை சேவை செய்வதுடன் தங்களுக்கு விருப்பமான துறைகளிலும் தொழில் முனைவோராக அறிமுகமாகி, மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். ‘நான் மகான் அல்ல’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார். இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வண்ணத்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகை நீலிமா இசை, புதிதாக ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியதன் மூலம் தன்னுடைய சேவையை இளம்பெண்களுக்கும்.. இல்லத்தரசிகளுக்கும்.. பெண்மணிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார். தொடர்ந்து புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்கி பணியாற்றி வரும் அவருக்கு சமூக ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

Post navigation

Previous இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.
Next ZEE5 தளத்தில் அதிவேக100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை !

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.