ஜே எஸ் ஜே சினிமாஸ் மற்றும் ஏ எஸ் வி கிரியேஷன்ஸ் சார்பில் ஜஸ்டின் விஜய் தயாரித்துக் கதாநாயகனாக ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் , கஸ்தூரி, அபிநயா ஷங்கர் நடிப்பில் எஸ் ஏ பிரபு இயக்கி இருக்கும் படம் ஸ்ட்ரைக்கர்.
ஸ்ட்ரைக்கர் படத்தின் நாயகன் (ஜோஷி) ஜஸ்டின் விஜய் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் கார் கம்பெனியில் வேலை செய்கிறார். நாயகன் ஜஸ்டின் விஜய் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை தன்னுடன் வேலை பார்க்கும் நண்பன் டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து (ஜோஷி) ஜஸ்டின் விஜய் தனது தவறால்
விபத்தின் மூலம் இறந்துபோனார்கள் என்று வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஜோஷி நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றியும் இறந்தவர்களின் ஆன்ம செயல்பாடுகள்குறித்தும் விரிவாக வாதிக்கினர்த்தனர் .
நாயகன் (ஜோஷி) ஜஸ்டின் விஜய் அமானுஷ்ய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். அப்படி ஒருநாள் அவரின் காதலிக்கு அமானுஷிய சம்மந்தமான உதவி செய்ய செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தினால் ஒரு பிரச்சனையில் ஜோஷியும் , அவரின் காதலியும் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே ஸ்ட்ரைக்கர் படத்தின் மீதி கதை…
அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து அவர் குரலில் பேசி எச்சரிக்கிறது. நாயகியை ஆவி ஆட்டி வைக்கிறது ஆவியை வரவழைத்து ஆவியுடன் பேசும் காட்சிகளில் பரபரப்பையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்கு இந்த படக்குழு மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு திரையில் மிரட்டல் விருந்தாக கொடுத்துள்ளார் ஸ்ட்ரைக்கர் படக்குழு.
திரையில் (ஜோஷி) ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார் தனது முதல் படத்தில் திரிலர் படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ஜஸ்டின் , வித்யா பிரதீப் சிறப்பாக நடித்துள்ள , டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தனது அனுபவ நடிப்பினை திரையில் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பாகசெத்துள்ளார் , கஸ்தூரி நடிப்பு சிறப்பு , அபிநயா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார் .
விஜய் சித்தார்த் இசை, மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு திரையில் ஒளிப்பதிவு ,பின்னணி இசை மற்றும் நடிப்பு மிரட்டுகிறது திரையில் .