Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • ஜவான் திரை விமர்சனம்

ஜவான் திரை விமர்சனம்

admin September 7, 2023
ஜவான் திரை விமர்சனம்

ஜவான் திரை விமர்சனம்

நடிகர்கள் : ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியா மணி
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு
இயக்கம் : அட்லீ
கால அளவு :2 Hrs 49 Min
தயாரிப்பு : ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்

மும்பை, டெல்லி,சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு போன்ற மெட்ரோ சிட்டிகளில் ஷாருக்கானின் ஜவானுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம்.இந்தியில் மட்டும் 65 கோடி வரை வசூலித்துள்ள ஜவான் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஷாருக்கானின் ஜவான் முதல் நாளிலேயே 85 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தெரிகிறது.

ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி மற்றும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் நடிப்பில்
உருவாகியிருக்கும் படம் ஜவான் இன்று தமிழ், இந்தி,தெலுங்கு, ஆகிய மொழிகளில் இன்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி “ரசிகருக்கு திரையில் ஜவான் திருவிழா”.

அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கும் ஜவான் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை, சமூகத்தில் நடக்கும் அரசியல் அவலங்கள் தனது(அட்லீயின்) ஸ்டைலில் திரையில் ரசிக்கும்படியாக உள்ளது .

ஜவான் திரைப்படத்தில் ஆரம்ப கட்சியில் ஆற்றில் அடிபட்டு மிதந்துவரும் விக்ரம் ரத்தோரை (ஷாருக்கான்) பார்டரில் உள்ள மக்கள் மீட்டு காப்பாற்றுகின்றனர் . சிறிதுநாள் பிறகு அந்த ஊரை தீவிரவாதிகள் தாக்குகின்றனர் அவர்களிடம் இருந்து மக்களை ஜவான் விக்ரம் ரத்தோரை (ஷாருக்கான்) காப்பாற்றுகிறார் .

விவசாய அமைச்சரை கடத்தும் விக்ரம் அவரை விடுவிக்க 40 ஆயிரம் கோடி கேட்கிறார். அந்த பணத்தை ஆயுதம் தயாரிக்கும் தொழில் அதிபர் காளியிடமிருந்து (விஜய சேதுபதி) அதிகாரிகள் பெற்றுத் தருகின்றனர். அடுத்த நொடி அந்த பணம் மூலம் ஏழை விவசாயி களின் கடன் அடைக்கப்படுகிறது. விக்ரமை பிடிக்க நர்மதா ராய் ( நயன்தாரா) படைகளுடன் விரைகி றார்.விக்ரம் ரத்தோர் சுற்றி வளைத்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை.விக்ரம் யார் என்பதை கண்டுபிடிக்க நர்மதா ஒரு கைதியாக சிறைக்கு செல்கிறார். அங்குதான் விக்ரமுக்கு உதவும் அதிரடி பெண்கள் 6 பேர் இருக்கின்றனர்.

விக்ரம் ரத்தோர் என்ற வேடத்தில் தந்தையாகவும், அசாத் என்ற வேடத்தில் மகனாகவும் மிரட்டியிருக்கிறார் ஷாருக்கான். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி, காதல், எமோஷனல் என அனைத்தும் திரையில் ரசிக்கவைக்கிறது

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு, படத்தை விறுவிறுப்பாகவும் திரையில் ரசிக்கவைக்கிறது.ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தாலும், காட்சிகளில் இருக்கும் உயிரோட்டத்தை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

Post navigation

Previous Fever Grips Mumbai’s Gaiety Theatre As SRK Fans Celebrate FDFS With Firecrackers, Dhols*
Next தமிழ்க்குடிமகன் திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*
  • News

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*

April 27, 2026
*பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*
  • News

*பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*

April 27, 2026
பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*
  • News

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*

April 27, 2026
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.