Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • “கிங் ஆஃப் கொத்தா” திரை விமர்சனம்

“கிங் ஆஃப் கொத்தா” திரை விமர்சனம்

admin August 27, 2023
"கிங் ஆஃப் கொத்தா" திரை விமர்சனம்

"கிங் ஆஃப் கொத்தா" திரை விமர்சனம்

மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்‘கிங் ஆஃப் கோதா’இந்த படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேர் ஃபிலிம்ஸ் இணைந்து கிங் ஆஃப் கோதா படத்தினை தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, கோகுல் சுரேஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.

கொத்தா என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஷபீர், அங்கு கச்சா உள்ளிட்ட போதை வியாபாரத்தை செய்து வருகிறார்.புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரி ஷாகுல் (பிரசன்னா). அங்கிருக்கும் பிரபல கேங்ஸ்டர் கண்ணன் பாயை (ஷபீர் கல்லாரக்கல்) ‘அவன் ரொம்ப மோசமானவன்’ என்கிறார்கள் போலீஸார். ‘யாராக இருந்தாலும் பார்க்கலாம்’ என்று அவன் இடத்துக்கே சென்று மிரட்டுகிறார் ஷாகுல். போன பிறகுதான் தெரிகிறது, நிஜமாகவே மோசமானவன் என்று. அதிர்ச்சி அடையும் ஷாகுலுக்கு, கொத்தையில் ஏற்கெனவே ‘நல்ல’ தாதாவாக இருந்த ராஜு பாய் (துல்கர் சல்மான்) பற்றி தெரியவருகிறது. முள்ளை முள்ளால் எடுக்கத் திட்டமிடுகிறார் ஷாகுல். அவர் திட்டம் நிறைவேறியதா? கண்ணன் பாய்க்கும் ராஜு பாய்க்கும் என்ன தொடர்பு? அவரை ராஜு எப்படி முடிக்கிறார் என்பதுதான் படம்.

கேங்ஸ்டராக நடித்திருக்கும் துல்கர் சல்மான் கிங் ஆஃப் கொத்தா ரசிக்க வைக்கிறார். முதல் பாதியில் கொத்தா ராஜுவாக சில சண்டைக்காட்சிகளில் அசத்தியிருப்பவர், இரண்டாம் பாதியில் ராஜு மதராஸியாக திரையில் மிரட்டுகிறார்
.

கண்ணன் பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஷபீர் பெரிய டானாக திரையில் மிரட்டுகிறார், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கோகுல் சுரேஷ், துல்கர் சல்மான் – ஷபீர் இடையிலான நட்பு மற்றும் அவர்களுடைய கதையை சொல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்தர் ஆகியோரின் வேடங்கள் கதையின் ஓட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆனால், கொத்தா என்ற ஊர் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் விளங்குகள் செயற்கைத்தனமாக இருக்கிறது.

Post navigation

Previous பாட்னர் திரை விமர்சனம்
Next Shah Rukh Khan Unveils the teaser for the Upcoming Song ‘Not Ramaiya Vastavaiya’ from JAWAN during #AskSRK session*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.