Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” டிரெய்லர் !!

வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” டிரெய்லர் !!

admin August 16, 2023

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் “ஹர்காரா”. இன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின் பல அஞ்சல் அலுவலர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தின் வழியே வெளியுட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இப்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் சொல்கிறது.

வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரெய்லர், காளி வெங்கட் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல் இந்திய தபால் மனிதனின் கதையாக விரிகிறது. மிகப்புதுமையான முறையில் எடிட் செய்யப்பட்டிருக்கும் டிரெய்லரே ஒரு திரைக்கதை வடிவில் இருப்பது, திரை ஆர்வலர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஆக்சன் அதிரடி திரில்லர் என எதுவுமில்லாமல் நம்மை, நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குள், இழுத்து செல்லும், மனதை இலகுவாக்கும் படைப்பாக காமெடி,காதல் என அனைத்தும் நிறைந்த அம்சங்களுன் இப்படைப்பு உருவாகியுள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றித் திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்.

Post navigation

Previous கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*
Next டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் “மத்தகம்” ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.