Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லெட்ஸ் கெட் மேரீடு (LGM)(திரை விமர்சனம்

LGM திரை விமர்சனம்

Posted on July 28, 2023

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா
ரன்னிங் டைம் : 2 மணி நேரம் 32 நிமிடம்
இயக்கம் & இசை : ரமேஷ் தமிழ்மணி
தயாரிப்பு : சாக்‌ஷி தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி. சினிமா தயாரிப்பாளராக, அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் (லெட்ஸ் கெட் மேரீடு ) L G M (எல்.ஜி.எம்) இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்.

எல்.ஜி.எம் திரைப்படத்தில் யோகிபாபு, நதியா நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.இரண்டு ஆண்டுகளாக காதலிக்கும் கவுதம்(ஹரிஷ் கல்யாண்) மற்றும் மீராவை(இவானா) அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. எல்லாம் நன்றாக செல்ல திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு கவுதமின் அம்மாவுடன்(நதியா) சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க மீராவுக்கு பிடிக்கவில்லை. அம்மா மற்றும் குடும்பத்தாரை புரிந்து கொள்ள ஒரு ட்ரிப்புக்கு அழைத்து வருமாறு கவுதமுக்கு ஐடியா கொடுக்கிறார் மீரா. சரி என்று சொல்லி அனைவரையும் ஒரு ட்ரிப்புக்கு அழைத்துச் செல்கிறார் கவுதம். ஆனால் இந்த ட்ரிப்புக்கு பின்னால் இருக்கும் நோக்கம் கவுதமின் அம்மாவுக்கு தெரிய வர இந்த டிப்பில் ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியாவுக்கும் செட் ஆனதா இல்லையா என்பதை சொல்வது தான் ‘எல்.ஜி.எம்’.

இந்த காலத்து பெண்கள் கணவர் பற்றி தெரிந்துக்கொள்வதை விட மாமியர் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பும் வது வரவேற்க்க வேண்டிய ஒன்றுதான் இளம் பெண்களின் இதுபோன்ற செயல் ஆச்சரியமாக இருந்தாலும், இப்படி நடந்தால் நன்றாகதான் இருக்கும் .

உலகம் முழுவதும் இது போன்று மாமியார் மருமகள் பிரச்சனை எல்லாம் குடும்பங்களிலும் இருப்பவை தான் என்பதால், நிச்சயம் மக்கள் இந்த படத்துடன் எளிதாக கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது . காதல் கதையாகவும், குடும்ப படமாக கொடுத்து குடுப்பத்துடன் திரையில் ரசிக்கும்படமாக கொடுத்து வெற்றி பெற்றிபெற்றுஇருக்கின்றனர் படக்குழு .

  • Replacement on 14-Year-Old with Rare Heart Anatomical Abnormality and Metabolic Disorder
  • அரிதான இதய உடற்கூறியல் குறைபாடு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு கொண்ட 14 வயது சிறுமிக்கு, சிக்கலான மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மூலம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு  விழா!!
  • Renacon Invests 350 Crore to Launch RENAFLEX Fibre Cement Boards, Powering a Greener, Faster and Safer Future for Construction
  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme