Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அறிவியல் கலந்த திரில்லர் படம் ரகுமான் - பரத் இணைந்து நடித்துள்ள " சமரா "

அறிவியல் கலந்த திரில்லர் படம் ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள ” சமரா “

Posted on July 28, 2023

Peacock Art House என்ற பட நிறுவனம் M. K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ” சமரா ” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.

” துருவங்கள் பதினாறு ” படத்திற்கு படத்தை போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும்
டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
இசை – தீபக் வாரியர்
பின்னணி இசை – கோபி சுந்தர்
பாடல்கள் –
எடிட்டிங் – R. J.பாப்பன்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
நடனம் – டேனி பவுல்
தயாரிப்பு – M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ்.
வசனம் –
கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.

படம் பற்றி இயக்குனர் சார்லஸ் ஜோசப் பேசியதாவது….
ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன்
அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.
விருவிருப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme