Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • சிவகார்த்திகேயன் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார்

சிவகார்த்திகேயன் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார்

admin July 12, 2023

சிவகார்த்திகேயன் மேடையில் பேசியபோது, “மடோன் எடுத்த படம் அனைத்தும் கடுமையான கதைகள். ஆனால் அதை ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்து கொண்டு பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பில் ஒரு நாள் கூட அவர் யாரையும் திட்டியது இல்லை. ஆனால், அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் இந்த படம் இருக்காது, வேறு பாதையில் நடித்து உள்ளேன். இந்த படம் ஒரு பேண்டசி படம். தயாரிப்பாளர் பணம் அளிப்பவர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரின் மனதில் இருக்கும் கதையை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என யோசிப்பவரும்தான்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்; அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நடிகனாய் என்னுடைய படம் மக்களிடம் சரியாக செல்கிறதா, அவர்களுக்கு பிடித்தது போல் இருக்கின்றதா என்பதை பார்ப்பது மட்டும்தான் எனக்கானது. படங்கள் இயக்குவது என்பது மிக மிகக் கடுமையான பணி; எனக்கு படங்கள் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார்.

Post navigation

Previous Dr Shivaraj Kumar, Karthik Adwaith, Sudheer Chandra Padiri’s #ShivannaSCFC01 Announced
Next ராசா விக்ரம் இயக்கும் புது வேதம் பட ஆடியோ வெளியீட்டு விழா!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.