Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்

Posted on June 19, 2023

சென்னை:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாடானையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி , முதுகுளத்தூர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம், தலைஞாயிறு பகுதிகளில் தலா 6 செமீ மழையும், சோழவந்தான், சாத்தூர் , மதுக்கூர்,விருதாச்சலம்,கோவிலங்குளம், திருத்துறைப்பூண்டி,மகாபலிபுரம்,பட்டுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும். மே 5ஆம் தேதி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 6ம் தேதி விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். . மே 7 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

இடி மின்னலுடன் கனமழை நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22 மாவட்டங்களில் கனமழை 27ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானம் மேகமூட்டம் சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme