Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பொம்மை திரை விமர்சனம்

பொம்மை திரை விமர்சனம்

Posted on June 17, 2023

ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா) அம்மா விபத்தில் இறந்துவிடுகிறார் இனத்தால் தனிமையையில் இருக்ககும் ராஜ் குமார் மன உளைச்சலால் அவரது படிப்பும் பாதிக்கிறது அப்போது புதிதாக குடிவரும் நந்தினி பள்ளி காலத்து நல்ல நடப்பாகா நந்தினியை(ப்ரியா பவானிசங்கர்) இருவரின் நடப்பு தொடர்கிறது திருவிழாவில் தனது தோழியை தொலைக்கிறார் அது தனது தவறால் நடந்தது என்று மனநலம் பாதிக்கப்படுகிறார் ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா) அதிலிருந்து மீண்டாரா என்பதே இந்த பொம்மை திரைப்படத்தின் கதை .

ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா) பொம்மை தொழிற்சாலையில் பெயிண்ட் அடிப்பவராக வேலை செய்கிறார் சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். தொழிற்சாலைக்கு வரும் பொம்மை ஒன்று தன் பள்ளி காலத்து (தோழி)காதலியான நந்தினியை(ப்ரியா பவானிசங்கர்) ராஜுவுக்கு நினைவூட்டுகிறது. இதையடுத்து கற்பனையில் அந்த பொம்மையை காதலித்து தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார். பொம்மையை நிஜம் என நினைக்கிறார்.

அந்த பொம்மையை மட்டும் விற்பனை செய்ய வேண்டாம் என ஃபேக்டரி சூப்பர்வைசரிடம் கூறுகிறார் ராஜு. இந்நிலையில் அவர் தனது தங்கை மகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சிக்கு ஊருக்கு சென்ற நேரத்தில் நந்தினி போன்று இருக்கும் பொம்மை சென்னையில் இருக்கும் ஷோரூம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊரில் இருந்து திரும்பி வந்த ராஜு, நந்தினி போன்று இருக்கும் பொம்மையை காணவில்லை என்றதும் கோபத்தின் உச்சிக்கே சென்று கொலைகாரராக மாறிவிடுகிறார். இதையடுத்து நந்தினி பொம்மை இருக்கும் கடையை தேடிக் கண்டுபிடித்து அங்கு வேலை செய்கிறார். தான் நினைத்த வாழ்க்கையை அந்த பொம்மையுடன் சந்தோஷமாக வாழத் துவங்குகிறார்.

இளைஞனின், பெண் பொம்மை இடையேயான காதல் திரையில் சிறப்பான இயக்கத்தின் மூலம் ராதாமோகன் வேலைவாங்கியுள்ளார் மனநல பிரச்சனைகளுடன் இருப்பவராக ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா) வாழ்ந்திருக்கிறார் . கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை திகைக்க வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ப்ரியாவுடன் சேர்ந்து படத்தை தன் தோள்களில் தாங்குகிறார். அழகான பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் தன் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் திரையில் வசீகரமாக உடலமைப்பால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் (ப்ரியா பவானி). அசையாத முகத்திலிருந்து வழிந்தோடும் கண்ணீர், அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் திரையில் ரசிக்கவைத்துள்ளார் “ப்ரியா பவானி” . சாந்தினி தமிழரசனுக்கு சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் மிகையில்லாத நடிப்பால் தனித்து தெரிகிறார்.

பொம்மை படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை “தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ” என ‘உல்லாச பறவைகள்’ படத்தின் தனது தந்தையின் பாடலை இன்றைய இளைஞர்கள் திரையில் ரசிக்கும்படியா “யங் மேஸ்ட்ரோ” யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் வெள்ளித்திரையில் ஜொலிக்க வைக்க உதவியிருக்கிறார் ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு .

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme