Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted on June 3, 2019

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்தும், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme