Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
‘பருந்தாகுது ஊர் குருவி’ திரை விமர்சனம்-indiastarsnow.com

‘பருந்தாகுது ஊர் குருவி’ திரை விமர்சனம்

Posted on March 24, 2023

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பிணத்தையும் அதனுடன் அமர்ந்திருக்கும் நாயகனையும் அவர்களது பக்கத்தில் ஒரு பாம்பையும் காட்டி ரசிகர்களை மிரட்டிய இயக்குநர், அதே மிரட்டலை படம் முழுவதும் காட்ட முற்றிலுமாக தவறியிருக்கிறார்.
ஓர் இரவு..அடர்ந்த காட்டுக்குள் ஒருவனை கொல்லத் துரத்தும் கும்பல்..அவனை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன்..இறுதியில் என்ன நடந்தது? இதுதான் பருந்தாகுது ஊர்குருவி படத்தின் கதை.
சின்ன சின்ன திருட்டுகள்-அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ). ஒரு நாள் இவர் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு தகவல் வருகிறது. அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை இழுத்துக்கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார், போலீஸ் அதிகாரி போஸ்.
ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் கெஞ்சுகிறார். அந்த பெண் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. சிறிது நேரத்திற்குள் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் மீண்டும் வருகிறது.மறுபக்கம் போலீஸ் துரத்துகிறது. இறுதியில் நிஷாந்த் அவரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘பருந்தாகும் ஊர் குருவி’ படத்தின் ‘பருந்தாகுது ஊர் குருவி’ திரை கதை.

முதல் படமாக இருந்தாலும் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாக நடித்திருக்கும் நாயகன் நிஷாந்த் ரூசோ, துறுதுறு நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன்னை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்? என்றே தெரியாமல் உயிர் பயத்தோடு பயணிக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் தனது கதபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ஐயர், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் சாகர், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கோடாங்கி வடிவேலு ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

பருந்தாகுது ஊர்குருவி படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்சாக பார்க்ப்பட்டது, அதன் பின்னணி இசையும் அபரிமிதமான ஒளிப்பதிவும்தான். பச்சை பசலென இருக்கும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டிற்குள் சண்டை காட்சிகளையும் ஓடை காட்சிகளையும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோவெல்லிற்கு பாராட்டுகள். படத்தின் ஒரு கண் ஒளிப்பதிவு என்றால், இன்னொறு கண்ணாக வருவது, பின்னணி இசை.

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme