Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அக நக முகநகையே..’ வந்தியத்தேவன், குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானது லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

Posted on March 21, 2023

பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர்
மணி ரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. “பொன்னியின் செல்வன் – 1” கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது.

இதன் அடுத்த கட்டமாக படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில்,
சக்திஶ்ரீகோபாலன் பாடிய.. வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவை (திரிஷா) இவர்கள் இடம் பெறும் காதல் பாடலாக “அக நக முகநகையே” என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் மற்றும் பல நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்கள் மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme