Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில்??

Posted on May 30, 2019

சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தரைச்சக்கரம், புஸ்வானம், பொட்டு வெடி, ரோல் கேப் உள்ளிட்ட சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் நார்னாபுரம், மேலப்புதூர், லெட்கமியாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சோ்ந்த சுமார் 50க்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் தயாரிப்பு அறை முழுவதும் தரைமட்டமானது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் முருகேசன், சுந்தர்ராஜ் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme