Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
அயோத்தி திரை விமர்சனம் - indiastarsnow.com

அயோத்தி திரை விமர்சனம்

Posted on March 3, 2023

அயோத்தியில் இந்து மத நம்பிக்கையின் மீது முழு ஈடுபாடுடன் வசிப்பவர் ராம பக்தரான யஷ்பால் ஷர்மா. மனைவி, மகள், மகன் ஆகியோரை அடிமைத்தனத்துடன் நடத்துகிறார். அவருக்கும் அவர் மீது கடும் பயம். இந்த சூழலில் ஒரு தீபாவளி பண்டிகையை அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் புனித யாத்திரை வருகிறார் யஷ்பால். அங்கு சென்று வந்தால் தன் கணவர் மாறிவிடுவார் என்று அவரின் மனைவி அஞ்சு அஸ்ரானி நினைக்கிறார். அந்த பயணத்தில் மதுரையில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் பயணம் செய்யும் கார் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் யஷ்பால். அப்போது நிகழும் விபத்தில் அவரின் மனைவிக்கு தலையில் பலத்த அடிப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிடுகிறார். மத அடிப்படையில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என யஷ்பால் சர்மா கூறுகிறார். பிரேத பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவ விதிமுறைகளை செய்தால் மட்டுமே உடலை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலையில், உடல் காசிக்கு பயணப்பட்டதா? இல்லையா? இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த சசிகுமாரின் முயற்சி என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘அயோத்தி’.

மொழி தெரியாத ஊர், இறந்துபோன அம்மா, கட்டுமிராண்டி அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார் நாயகி. அவரின் நிலையை பார்த்து நாயகன் சசிகுமார் உதவுகிறார். இறந்த உடலை அயோத்தி அனுப்ப பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. யார் என்றே தெரியாத குடும்பம், பெயரே சொல்லமல் உதவும் நாயகன் ஆகியோரை சுற்றியே கதை எழுதப்பட்டுள்ளது.

மதநம்பிக்கையின் மீது தீவிர பற்றுக்கொண்ட யஷ்பால் கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமமைக்கப்பட்டுள்ளது. அவரின் கதாபத்திரம் சிலரை நினைவுபடுத்தலாம் அல்லது யோசிக்க வைக்கலாம். மிகவும் சர்ச்சையான, சவாலான அந்த கதாபாத்திரத்தை எந்த பிரச்னைக்குள்ளும் மாட்டிக்கொள்ளாதபடி நியாயம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதனால் சினிமாத்தனம் கொண்ட காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டனர். மனித நேயம், மத நல்லிணக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தில் 10 ரூபாய் விட்டுகொடுக்காமல் ஒருவரை அசிங்கப்படுத்தும் யஷ்பாலுக்கு, பல ஆயிரம் ரூபாயை பெயரை தெரியாத நபர்கள் உதவுகின்றனர்.

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது., பின்னணி இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் நடிப்புக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலான பயணத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் பல உள்ளன. மதத்தை தாண்டி நிற்கும் மனிதமே முக்கியம், அதுவே சிறந்தது என்பதை துணிச்சலுடன் சொல்லியுள்ளனர். குறிப்பாக, படத்தின் இறுதி காட்சி யாரும் எதிராராதது. அந்த காசிக்கு ரசிகர்கள் பலரும் கை தட்டி பாராட்டுகின்றனர்.
இதில் நடித்துள்ள சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி, அஞ்சு என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme