Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இன் கார் திரை விமர்சனம்-indiastarsnow.com

இன் கார் திரை விமர்சனம்

Posted on March 3, 2023

கல்லூரி மாணவி( சாக்ஷி குலாட்டியின்)ரித்திகா சிங்கை, மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தில் செல்கிறது. அவர்கள் ரித்திகா சிங்கை கடத்தியது ஏன்? அவர்கள் யார்? அவர்களிடம் இருந்து ரித்திகா சிங் தப்பித்தாரா? இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதிலை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் சொல்வது தான் ‘இன் கார்’.

இந்தியாவில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் ஹர்ஷ் வர்தன், இதுபோன்ற குற்ற செயல்கள் எதிர்பாராமல் நடப்பது அல்ல திட்டமிட்டே நடத்தப்படுகிறது, என்பதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.

சாலையில் வரும் ஒரு காரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, காரைக் கடத்துகின்றனர் 3 கடத்தல்காரர்கள். அந்தக் கடத்தப்பட்ட காரிலே தான் சாக்ஷி குலாட்டி கடத்தப்படுகிறாள். அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது.

ரித்திகா சிங்கை கடத்தி செல்லும் சந்தீப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் ஆகிய மூவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பில் காமத்தையும், போதையையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோபத்யாய் மிக சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் காருக்குள் நடப்பது போல் இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தி போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தி செல்கிறார். சண்டைக்காட்சியையும், ரித்திகா சிங்கையும் மிக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் தனது கடுமையான உழைப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

  • தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
  • FROM SAVING UP FOR ₹1 ADHIRASAM TO JUDGING FESTIVE FAVOURITES: SAMANTHA RUTH PRABHU RECALLS A SWEET CHILDHOOD MEMORY ON CELEBRITY MASTERCHEF TAMIL
  • ₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்
  • ‘JADA’ FAME DIRECTOR KUMARAN RETURNS WITH ‘IRUVAR’, A SOULFUL MUSICAL PRODUCED BY STONEBROOK FILMS
  • ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme