Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டாடா திரை விமர்சனம்

டாடா திரை விமர்சனம்

Posted on February 11, 2023

கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்), இருவரும் காதல் ஜோடிகள். இவர்களுக்கு ஏற்பட்ட காதல்.. காதலையும் தாண்டி கல்லூரி முடிவடையும் முன்னே கர்ப்பிணி ஆனால் சிந்து. கவின் அந்த கர்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து அவரது பேச்சைக் கேட்காததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர்.மணி, திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே சுற்றுகிறார், குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். “திருந்தி விடுவார் என்று நினைத்து கணவன், இன்னும் இப்படியே இருக்கிறாரே” என்று மனம் நொந்து போகிறார், நாயகி. ஒரு சண்டையின் போது, “நீ செத்துரு” என்று கூறிவிட்டு போகும் நாயகன், மனைவி பிரசவ வலியில் கால் செய்யும் போதும் அதை பொருட்படுத்தாமல், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறார். இதன் விளைவாக, குழந்தை பெற்ற சிந்து அதனை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இப்போது, மணிகண்டன் தாழ்ந்த பொருளாதார நிலை இருந்தபோதிலும், பிறந்த குழந்தையை தனியாக வளர்ப்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறார். தொடங்கியது தந்தை மகன் உறவு. படத்தின் முதல் பாதியில் பொறுப்பற்ற இளைஞ்சன் ஆக இருக்கும் மணிகண்டன்.. மகன் பிறந்த பிறகு பொறுப்புள்ள தந்தையாக மாறுகிறரா.. சிந்துவை மீண்டும் சந்தித்தாரா என்பதே மீத கதை.

பாக்கியராஜ்-ஐஸ்வர்யா-சிறிது நேரமே வந்தாலும், நம் பெற்றோரை கண் முன்னே நிறுத்துகின்றனர், பாக்கியராஜும் ஐஸ்வர்யாவும். மகனின் குரலைக்கேட்டு ஒரு தாயாக துடித்தாலும், கணவரின் பேச்சைக் கேட்டு அவர் போட்ட கோட்டை தாண்டாத மனைவியாக மனதில் நிற்கிறார் ஐஸ்வர்யா. குணச்சித்திர நடிகர் விடிவி கணேஷ், இப்படத்தில் அறிவுரை கூறும் நலம் விரும்பியாகவும், அவ்வப்போது காமெடி பஞ்ச் வசனம் பேசுபவராகவும் வந்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் மற்றும் துணைக் கதாப்பாத்திரங்களாக வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் மனதில் நிற்கின்றனர்.

பிண்ணனி இசை மூலம் படத்திற்கு மேலும் உயிர் சேர்த்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜென் மார்டின். நமக்கு ஏற்படும் கஷ்டங்களை வைத்து ஜோக் அடிப்பது போல, இப்படத்திலும் கஷ்டமான நேரங்களில் சிரிப்பு மந்திரத்தைத் தூவி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார், இயக்குனர் கணேஷ் கே. பாபு. இவரது எதார்த்தமான காமெடி வசனங்களும், ஒரு இடத்தில் கூட கதையை போர் அடிக்காமல் கொண்டு சென்ற விதமும் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

  • The Script That Left Screenplay Maestro K. Bhagyaraj Impressed — What Lies Beneath ‘Beep’ Ahead of Its September 18 Release?
  • திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் ‘பீப்’ பட ரகசியங்கள் என்ன ?
  • கோவை, Get Ready! தமிழ் ஐடல் உங்கள் நகரத்திற்கு வருகிறது!
  • Kovai, Get Ready! Tamil Idol Is Coming to Your City
  • மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme