Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்

இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

Posted on January 24, 2023

சென்னை:
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமா மீதான மோகத்தால் சென்னைக்கு புலம்பெயர்ந்தவர். எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் எழுத்தாளராக எண்ணற்ற படங்களில் வேலை பார்த்துள்ளார்.
சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ், காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
  • FROM SAVING UP FOR ₹1 ADHIRASAM TO JUDGING FESTIVE FAVOURITES: SAMANTHA RUTH PRABHU RECALLS A SWEET CHILDHOOD MEMORY ON CELEBRITY MASTERCHEF TAMIL
  • ₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்
  • ‘JADA’ FAME DIRECTOR KUMARAN RETURNS WITH ‘IRUVAR’, A SOULFUL MUSICAL PRODUCED BY STONEBROOK FILMS
  • ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme