தமிழகத்தின் உள்மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு உள்மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், வேலூர், நாமக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல் கோட்டாட்சியர் ஒத்திவைத்தார்.
ஈரோடு அருகே நிலப்பிரச்சனையில் முன்னாள் நீதிபதி தாக்கியதாக புகார்
ஈரோடு : கோபிசெட்டிபாளையத்தில் நிலப்பிரச்சனையில் முன்னாள் நீதிபதி தாக்க முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். முன்னாள் நீதிபதி பாரதி, அவரது மகள், மருமகன் தன்னை கொள்ளமுயன்றதாக தொழிலதிபர் நிர்மலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பாரதி குடும்பத்தினர் தாக்கியதில் காயம் அடைந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் நிர்மலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
தருமபுரி: தருமபுரி மாவட்டம் மேக்னாம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார்(27) என்பவர் மாணவியை கடத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்தியதால் வாலிபர் கைது செய்யப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொகை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2 குழந்தை பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுப்பவர்களுக்கு அரசு உதவி , இதர சலுகைகள், அரசு வேலை வழங்க தடை விதிக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி தயாநிதி மாறனை வாழ்த்துகிறேன்: கே.எஸ்.அழகிரி …
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி தயாநிதி மாறனை வாழ்த்துகிறேன் என சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். சாதியோ, மதமோ எங்களது கொள்கையில் குறுக்கிட முடியாது எனவும் கூறினார். தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் வடஇந்தியாவிலும் நன்கு பிரச்சாரம் செய்வதே எங்கள் இலக்கு எனவும் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை: தமிழக்த்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை : ஜாமீன் மனு தள்ளுபடி
நாமக்கல் : ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இடைத்தரகர் லீலா, உதவி செவிலியர் சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாகக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இடைத்தரகர் லீலா நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் 4-வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.
ரூ.10 கோடியை திருப்பி தரக் கோரி கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: வெளிநாடு செல்ல வைப்பு நிதியாக உச்சநீதிமன்றத்தில் செலுத்திய ரூ.10 கோடியை திருப்பி தரக் கோரி கார்த்தி சிதம்பரம் மனு அளித்துள்ளார். தொகுதி மக்களை சென்று கவனிக்குமாறு அறிவுறுத்தி எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு விமான நிலையத்தில் தீ விபத்து
பெங்களூரு : பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ சற்றுநேரத்தில் உணவு விடுதி முழுவதும் எறியத் தொடங்கியது. விமான நிலையத்தின் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை, பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது: தமிழிசை
சென்னை: தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை, பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அக்கறை உள்ளது எனவும், ரூ 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் கூறினார். தமிழகத்திற்கு சாதகமான திட்டங்கள் இல்லையெனில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்
கன்னியாகுமரி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான நிலையில், எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.
தமிழக அரசியலில் குதிக்கும் ‘கர்நாடக சிங்கம்’
பெங்களூரு: கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றி ‘ கர்நாடக சிங்கம்’ என பெயரெடுத்த தமிழக ஐ.பி.எஸ், அதிகாரி அண்ணாமலை, தனது போலீஸ் துணை கமிஷனர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தமிழக அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை முடிவு குறித்து கர்நாடக ரயில்வேத் துறை டிஐஜி ரூபா டுவிட்டரில் க;றியுள்ளதாவது: அண்ணாமலையுடன் பேசினேன். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் அரசியலில் இணைய உள்ளார். பாதுகாப்பான, திறமையான பதவியை ராஜினாமா செய்ய தைரியம் வேண்டும். அண்ணாமலை போன்ற சாதனையாளர்கள் அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
1564 ஆசிரியர்கள் பதவி உயர்வு ரத்து…
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு 17 பி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானோரின் பெயர் பதவி மூப்பு பட்டியலில் ஈடுபடாது என்ற விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் வைத்த நம்பிக்கையை ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம் காப்பாற்றுவர் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.
ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை வீழ்த்த துணைபோக மாட்டேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்தார்.
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா.
மீண்டும் பிரதமராக மோடி நாளை இரவு பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்
டெல்லி: பொதுத் தேர்தல் முடிந்த கையோடு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 80 பைசா வரை உயர்ந்துள்ளது.
கள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட மனைவி….
நாமக்கல்: கள்ளக்காதல் கொலைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இடைஞ்சலாக இருக்கும் பிள்ளைகளை ஈவு இரக்கமின்றி கொள்வது, கணவன் தலையில் கல்லைப்போட்டு கொல்வது என்று இருந்த நிலையில் கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கள்ளக்காதலனுடன் கொலை செய்த முயற்சி செய்தார் ஒரு பெண். விழித்துக்கொண்ட கணவன் அங்கிருந்து தப்பி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, அந்த பெண்ணையும், கொலை செய்ய உதவியாக இருந்த நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
உயிர் தப்பிய நபரின் பெயர் முருகேசன் என்பதாகும். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலை அடிவாரத்தில் உள்ள ஜெ.ஜெ காலனியில் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியா என்ற மனைவியும் 10 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கொல்கத்தா: தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பட்டா கத்தியை கொடுத்து சாவர்கரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறது இந்து மகாசபை.