Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

IMDb 2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு

Posted on December 7, 2022

தேசிய விருது பெற்ற நடிகரும், *Global* *Iconனுமான* நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார். ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ‌ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயிலாக, முதல் முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும். ‘வாத்தி/ சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்ட திரைப்படங்கள் ஆகும்.

*ரியாஸ் K அஹ்மத்*

  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்
  • இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
  • பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது
  • ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
  • ஐபி கிளைம்ப் (IP Climb) மற்றும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme