Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வதந்தி வெப் தொடர் விமர்சனம்!

வதந்தி வெப் தொடர் விமர்சனம்!

Posted on December 2, 2022

வதந்தி வெப் தொடர் விமர்சனம்!
வதந்தி வெப் தொடர் விமர்சனம்!
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் எஸ். ஜே. சூர்யா, சஞ்சனா இதில் விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் இந்த வலைதள தொடருக்கு ஒளிப்பதிவு மற்றும் சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். புஷ்கர் காயத்திரி இந்த வெப் சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள.தற்போது எஸ்ஜே சூர்யா ஓடிடி பக்கம் திரும்பியுள்ளார், அமேசான் பிரைமில் வதந்தி என்ற தொடர் மூலம் கால்பதித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ள வதந்தி முதல் சீசன் 8 தொடர்களாக உருவாகி உள்ளது. சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்ம்ருதி வெங்கட், அஸ்வின் குமார் என பலர் நடித்து உள்ளனர்.

படத்தில் கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது. ஆனால், அந்த இடத்தில் ஒரு பெண் இறந்து பிணமாக இருக்கிறார். அந்த சமயம் பார்த்து இவர்களுடன் சென்ற அந்த காணாமல் போகிறார். இதனால் கதாநாயகியும் இறந்திருப்பார் என்று படக்குழு பயந்து சமூக வலைத்தளங்களில் கதாநாயகி இறந்து விட்டதாக அறிவிக்கிறது. பின் கதாநாயகி படக்குழுவினருக்கு போன் செய்து, நான் என்னுடைய காதலனுடன் பெங்களூருக்கு சென்று விட்டேன்.

என்னை பற்றி தவறான வதந்திகளை வெளியிடாதீர்கள் என்று கூறுகிறார். இந்த கேசை தான் படத்தின் நாயகன் எஸ் ஜே சூர்யா விசாரிக்க வருகிறார். இறந்து கிடந்த சூர்யா பரிசோதித்த போது அவர் லைலாவின் மகள் வெலோனி என்பது தெரிகிறது. இதை விசாரிக்க எஸ் ஜே சூர்யா வெலோனியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு பல தகவலுக்கு கிடைக்கிறது. வெலோனியின் அம்மா ஒரு லாட்ஜ் நடத்துகிறார். அங்கு தான் அவரின் குடும்பமும் தங்கி இருக்கிறது.

அதோடு வெலோனி ஆண்களிடம் அதிகமாக வலிந்து பேசுபவர் என்று தெரிய வருகிறது. பின் அவரை பற்றி நல்லவிதமான தகவல் கிடைத்தவுடன் இந்த கேசை முடிக்கிறார்கள். ஆனால், கிடைத்தவுடன் சூர்யாவின் மனதுக்குள் இந்த கேஸ் உறுதிக் கொண்டிருக்கிறது. பின் இவர் தனியாக சென்று விசாரிக்கிறார். வெலோனி எப்படிப்பட்டவர்? அவரை யார் கொன்றார்கள்? இதை எல்லாம் எஸ் ஜே சூர்யா கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி.

எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார். கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம். சஞ்சனாவிற்கு இந்த தொடர் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. பல இடங்களில் சிறப்பாக நடித்துள்ளார், கதைக்கும் முக்கிய கதாபாத்திரமாக உள்ளார். லைலாவிற்கு சர்தார் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எழுத்தாளராக நாசர் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக உள்ளார். வதந்தி தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
போலீஸ் எப்படி ஒரு கொலையை துப்பு துலக்கும் என்பதை டீடைலாகவும், இன்ட்ரெஸ்டிங் ஆகவும் சொல்ல முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர். குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் கூடுதல் வலுசேர்த்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் நடப்பதால் அந்த பகுதி மக்கள் பேசும் மொழியையும் கதைக்குள் புகுத்தி உள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது வதந்தி.

  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்
  • இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
  • பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது
  • ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
  • ஐபி கிளைம்ப் (IP Climb) மற்றும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme