Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிரபல நடன இயக்குநர் பத்தாண்டு இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்

பிரபல நடன இயக்குநர் பத்தாண்டு இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்

Posted on November 28, 2022

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் – லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10-வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கும் முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் பணிபுரிந்து பிரபலமானவர்.
ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களின் 10வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

  • இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
  • பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது
  • ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
  • ஐபி கிளைம்ப் (IP Climb) மற்றும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
  • Anbe Diana now streaming on Sony LIV*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme