Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
The leaders of Round Table India

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ‘கல்வி மூலம் விடுதலை’ எனும் திட்டத்தின் மூலம் இந்தியா

Posted on November 21, 2022

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ‘கல்வி மூலம் விடுதலை’ எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டமைத்து உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் விஜயராகவேந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோராண்டும் நவம்பர் 14 ஆம் தேதி முதல் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிடயோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் சந்தோஷ், கல்வி மூலம் விடுதலை என்கிற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 வகுப்பறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பு, ஐ.ஐ.டி யுடன் இணைந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீல் சேர்களை உருவாக்கி சுமார் 200 பேருக்கு வரழங்கியுள்ளதாகவும் கூறினார். இது தவிர நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ஏரியா 2 என்பது சென்னை, புதுச்சேரி மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதி என்றும் , இந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் ஏரியா 2இன் தலைவர் விஜய் ராகவேந்திரா தெரிவித்தார்…

  • அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு
  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme